| பள்ளியில் கழிவுநீர் தேக்கம் Dinamalar
பள்ளியில் கழிவுநீர் தேக்கம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

12 ஜூன்
2019
00:43

அடையாறு : பிரதான குழாயில் ஏற்பட்ட அடைப்பை, 10 நாட்களாகியும் சரி செய்யாததால், மாநகராட்சி பள்ளி மாணவ - மாணவியர், மிகவும் பாதிக்கப்படுகின்றனர்.அடையாறு மண்டலம், 175வது வார்டு, காமராஜர் நகர், 2வது தெருவில், மாநகராட்சி உயர்நிலை பள்ளி உள்ளது. இங்கு, 400க்கும் மேற்பட்ட, மாணவ - மாணவியர் படிக்கின்றனர்.இதே தெருவில் செல்லும், பிரதான கழிவுநீர் குழாயில், 10 நாட்களாக அடைப்பு ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும், கழிவுநீர் சாலையில் வெளியேறி, பள்ளிவாசல் அருகே, தேங்கி நிற்கிறது.இதனால், மாணவ - மாணவியர், கழிவுநீரில் நடந்து செல்ல வேண்டி உள்ளது.



தொற்று, நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.மேலும், பிரதான குழாய் அடைப்பால், பள்ளி வளாக கழிப்பறைகளில் கழிவுநீர் வெளியேறாமல், அங்கே தேங்கி நிற்பதால், மாணவ - மாணவியருக்கு, கழிப்பறை செல்ல முடியாத, அவல நிலை ஏற்பட்டுள்ளது.சாலையில், தேங்கி நிற்கும் கழிவுநீரில் இருந்து வீசும் துர்நாற்றத்தால், வகுப்பறையில் பாடம் நடத்த முடியாமல், ஆசிரியர்கள் சிரமப்படுகின்றனர்; கொசு தொல்லையும் அதிகரித்துள்ளது.சாலையில் தேங்கி நிற்கும் கழிவுநீரால், வாகன ஓட்டிகள், பாதசாரிகளும் சிரமப்படுகின்றனர். பள்ளி நிர்வாகம், குடிநீர் வாரியத்திடம் முறையிட்டும், அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. பிரதான குழாய் அடைப்பை சரி செய்வதுடன், பள்ளி வளாக கழிப்பறை அடைப்புகளையும் சரி செய்ய வேண்டும் என, மாணவ - மாணவியர் கோரிக்கை விடுத்தனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X