| வரதட்சணை: மனைவியை தாக்கியகணவர் உட்பட 5 பேர் மீது வழக்கு Dinamalar
வரதட்சணை: மனைவியை தாக்கியகணவர் உட்பட 5 பேர் மீது வழக்கு
Advertisement
 

பதிவு செய்த நாள்

12 ஜூன்
2019
00:47

திருவாடானை:வரதட்சணை கேட்டு மனைவியை கட்டையால் தாக்கிய கணவர் உட்பட ஐந்து பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.



சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டை தாலுகா ஆந்தகுடியை சேர்ந்தவர் ராஷ்டிரியா 29. இவருக்கும் திருவாடானை அருகே கூடலுார் கிராமத்தை சேர்ந்த குமார் 38, என்பவருக்கும் 2011ல் திருமணம் நடந்தது. திருமணத்தின் போது 20 பவுன் நகை வரதட்சணையாக கொடுக்கப் பட்டது. தற்போது மேலும் ஐந்து லட்சம் ரூபாயும், 10 பவுன் நகையும் கேட்டு ராஷ்டிரியா துன்புறுத்தப்பட்டார்.



களைகொத்து கனையால் கணவர் குமார் தாக்கியதில் முதுகில் காயம் ஏற்பட்டது. ராஷ்டிரியா புகாரில் கணவர் குமார், அவருக்கு துணையாக இருந்த மாமியார் மங்கை, மாமனார் குருசாமி மற்றும் கணவரின் உறவினர்கள் கோட்டைசாமி, பஞ்சவர்ணம் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்த திருவாடானை மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நர்மதா அவர்களை தேடிவருகிறார்.

 

Advertisement
மேலும் ராமநாதபுரம் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X