ரயில்வே சுரங்கப்பாதை பணிகள், 13 ஆண்டுகளுக்குப்பின், தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.ஆவடி அடுத்த இந்து கல்லுாரி ரயில் நிலையம் அருகே, எல்.சி., - 9 என்ற ரயில்வே கேட் உள்ளது.சென்னை- - திருப்பதி நெடுஞ்சாலையோரமாக உள்ள இந்த ரயில்வே கேட்டை, வாகன ஓட்டிகள் சிரமமின்றி கடக்க, சுரங்கப்பாதை அமைப்பதற்கு திட்டமிடப்பட்டது.அதன்படி, 2006ல், 8.58 கோடி ரூபாய் மதிப்பீட்டில், பணிகள் துவங்கின.
ஆனால், அதன்பின், பல்வேறு காரணங்களால், பணிகள் கிடப்பில் போடப்பட்டன.கடந்த, 11 ஆண்டுகளுக்குப்பின், 2017ல், 20.58 கோடி ரூபாய் மறுமதிப்பீடு செய்து, பணிகள் மீண்டும் துவங்கின.தொடர்ந்து, நிலம் கையகப்படுத்தப்பட்டு, நடைபெற்று வந்த, இந்த பணிகள், சமீபகாலமாக விறுவிறுப்படைந்துள்ளன.சென்னை -- திருவள்ளூர் நெடுஞ்சாலையோரத்தில், 616.8 அடி நீளத்தில், சுரங்கப்பாதை தோண்டும் பணிகள், மும்முரமாக நடைபெற்று வருகின்றன.அடுத்தகட்டமாக, ரயில்வே பகுதியில், 246 அடி நீளத்திலும், கிராம பகுதியில், 449.5 அடி நீளத்திலும், பணிகள் நடைபெற உள்ளன.
இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:இந்த, சுரங்கப்பாதை, 26.25 அடி ஆழம், 1,312.3 அடி நீளத்தில் அமைய உள்ளது. மழைக்காலங்களில் தண்ணீர், சுரங்கப்பாதையில் தேங்காமல் இருக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன், பணிகள் நடந்து வருகின்றன.இவ்வாறு அவர்கள் கூறினர்.எல்.சி., - -9 ரயில்வே கேட்சுரங்கப்பாதை ஆழம் 26.25 அடிசேக்காடு கிராம பகுதி நீளம் 449.5 அடிரயில்வே பகுதி நீளம் 246 அடிநெடுஞ்சாலை துறை பகுதி நீளம் 616.8 அடிமொத்த நீளம் 1,312.3 அடி