பா.ஜ., அரசு நல்ல திட்டங்களைகொண்டுவந்தால் வரவேற்பேன்: எம்.பி., நவாஸ்கனி பேட்டி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 ஜூன்
2019
00:50

ராமநாதபுரம்:பா.ஜ., அரசு தமிழகத்திற்கு நல்ல திட்டங்களை கொண்டு வந்தால் வரவேற்பேன் என்று ராமநாதபுரத்தில் எம்.பி., நவாஸ்கனி தெரிவித்தார்.



அவர் கூறியதாவது:மாவட்டத்தில் குடிநீர் பிரச்னை பிரதானமாக இருக்கிறது. ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தில் பல இடங்களில் குழாய்கள் பழுதடைந்து தண்ணீர் வீணாகிறது. அவற்றை சரி செய்ய கலெக்டரிடம் வலியுறுத்துவேன். நரிப்பையூர் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.


ராமநாதபுரத்திற்கு பகல்நேர ரயில்சேவை, வெளிநாட்டில் வேலை செய்பவர்கள் மாவட்டத்தில் அதிகமாக இருப்பதால் விமான நிலையம் அமையவும் மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும். தமிழக மீனவர் பாதுகாப்பு குறித்து மத்திய அரசு அனுமதியுடன் இலங்கை சென்று அந்நாட்டு மீன்வளத்துறை அமைச்சரை சந்திக்க உள்ளேன்.



மேலும் இலங்கை சிறையில் உள்ள 200 மீனவர்களை விடுவிக்கவும், மீனவர்களுக்கு தனி அமைச்சகம் தொடங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். பா.ஜ., அரசு எங்களது கோரிக்கையை நிறைவேற்றும் என்ற நம்பிக்கை இருக்கிறது. ராமநாதபுரம் லோக்சபா தொகுதியில் மத்தியில் உள்ள பா.ஜ., அரசிடம் மக்கள் நலத்திட்டங்களை கேட்டு பெறுவேன்.அதை நிறைவேற்றா விட்டால் மக்களை திரட்டி போராடவும் தயங்கமாட்டேன்.



நல்ல திட்டங்களை பா.ஜ., அரசு தமிழகத்திற்கு கொண்டு வந்தால் வரவேற்பேன். தமிழர்களின் உரிமைகளை பாதிக்கும் விதமான திட்டங்களுக்கு எதிர்ப்பை காட்டவும் தயங்கமாட்டேன், என்றார்.

 

Advertisement
மேலும் ராமநாதபுரம் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X