சென்னை : மாநில அளவிலான எறிபந்து போட்டிக்கான பயிற்சி முகாமில், 72 வீரர் - வீராங்கனையர், பங்கேற்கின்றனர்.தமிழ்நாடு எறிபந்து சங்கம் சார்பில், மாநில அளவிலான சப் - ஜூனியர் மற்றும் ஜூனியர் எறிபந்து போட்டி, ஜூலையில் நடக்கிறது. சப் - ஜூனியர் பிரிவில், 15 வயதிற்கும், ஜூனியர் பிரிவில், 19 வயதிற்கும் உட்பட்ட வீரர் - வீராங்கனையர், போட்டியில் பங்கேற்கின்றனர்.இதில், திறமையை வெளிப்படுத்த உள்ள, வீரர் - வீராங்கனையருக்கான பயிற்சி முகாம், இன்று துவங்குகிறது. கொளத்துார், ஜெய்கோபால் கரோடியா பள்ளியில், வீராங்கனையர் மற்றும் மயிலாப்பூர் பி.எஸ்.மேல்நிலைப்பள்ளியில், வீரர்களுக்கான பயிற்சி அளிக்கப்படுகிறது.
மொத்தம், 10 நாட்களுக்கு இந்த முகாம் நடக்கிறது.ஒவ்வொரு பிரிவிலும், தலா, 18 வீதம், மொத்தம், 72 பேர் முகாமில் பங்கேற்கின்றனர். ஒவ்வொரு பிரிவிலும், 14 வீரர் - வீராங்கனையர் வீதம், மொத்தம், 56 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதில், தேர்வு செய்யப்படுவோர், மாநில போட்டிக்கு தகுதி பெறுவர்.