சமையலறை கூடம், பயன்பாடின்றி உள்ளதால், மீன் பிரியர்கள் அதிருப்தி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 ஜூன்
2019
00:55

காசிமேடு, : காசிமேடில், 2 கோடி ரூபாயில் அமைக்கப்பட்ட, மைய சமையலறை கூடம், பயன்பாடின்றி உள்ளதால், மீன் பிரியர்கள் அதிருப்தியில் உள்ளனர்.சென்னையில் மக்கள் அதிகம் கூடும், பிராட்வே, கோயம்பேடு பேருந்து நிலையங்கள், கோயம்பேடு சந்தை, தி.நகர் உள்ளிட்ட இடங்களில், கடைகள் அமைத்து, மீன் உணவுகளை விற்பனை செய்ய, தமிழக மீன் வளர்ச்சி கழகம், முடிவு செய்தது.இதற்காக, 2 கோடி ரூபாயில், மீன் உணவுகளை சமைக்க, மைய சமையலறை கூடம் கட்ட முடிவெடுக்கப்பட்டது. 2015ல், முதற்கட்டமாக, 1.6 கோடி ரூபாய் செலவில், காசிமேடு, சூரிய நாராயண சாலையில், மைய சமையலறை கூடம் கட்டி முடிக்கப்பட்டது.சமீபத்தில், முதல்வர், இ.பி.எஸ்., சமையலறை கூடத்தை திறந்து வைத்த நிலையில், இதுவரை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரவில்லை. இதனால், கோடிக்கணக்கான ரூபாய் செலவில் வாங்கப்பட்ட, சமையல் உபகரணங்கள் பயன்பாடின்றி உள்ளன.மீன் உணவுகள் சாப்பிட காத்திருந்த மீன் பிரியர்களுக்கும், இது அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.இது குறித்து, அகில இந்திய மீனவர் சங்க தலைவர், நாஞ்சில் ரவி கூறியதாவது:தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகம் சார்பில், மெரினா, பெசன்ட் நகர், நீலாங்கரை கடற்கரையில், வண்டிகள் மூலம், மீன் உணவுகள் விற்பனை செய்யப்படுகின்றன.இதற்காக, 100 பேருக்கான உணவுகள் மட்டும், நேற்று முன்தினம் முதல், காசிமேடு சமையலறை கூடத்தில் தயாரிக்கப்படுகிறது. அரசு, 1 லட்சம் மக்களுக்கான உணவுகளை தயாரிக்கும் இடத்தை பூட்டி வைத்துள்ளது. திட்டம் பாழ்படுத்தி கிடப்பில் போட்டுள்ளது.இத்திட்டம் மூலம், நுாற்றுக்கணக்கானோர் வேலைவாய்ப்புகளை பெற முடியும். குறைந்த விலையில், தரமான மீன் உணவுகளை சாப்பிட முடியும்.எனவே, பயன்படுத்தப்படாமல் உள்ள சமையலறை கூடத்தில், உணவுகளை சமைத்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.இது குறித்து மீன்வளத் துறை அமைச்சர் ஜெயகுமார் கூறுகையில், ''சமையலறை கூடம், 15 நாட்களுக்குள் பயன்பாட்டிற்கு வர, அரசு நடவடிக்கை எடுக்கும்,'' என்றார்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X