கசியும் குடிநீருக்காக காத்திருக்கும் பெண்கள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 ஜூன்
2019
00:58

திருப்புவனம்:திருப்புவனத்தைச் சுற்றியுள்ள கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வரும் வேளையில் கூட்டு குடிநீர் திட்ட குழாயில் கசியும் தண்ணீரை பிடிக்க வெயிலில் பெண்கள் நீண்ட நேரம் காத்து கிடக்கின்றனர்.



திருப்புவனத்தைச் சுற்றிலும் 45 ஊராட்சிகளைச் சேர்ந்த 152 கிராமங்கள் உள்ளன. இதில் குறிப்பிட்ட ஒரு சில கிராமங்களுக்கு மட்டும் வைகை ஆற்றில் இருந்து கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வினியோகம் நடைபெறுகிறது.மீதமுள்ள கிராமங்களுக்கு அருகில் கண்மாய், ஊரணி போன்ற நீர் பிடிப்பு பகுதிகளில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு குடிநீர் வினியோகம் நடைபெறுகிறது.



கடந்த சில ஆண்டுகளாக மழை இல்லாததால் ஆழ்துளை கிணறுகள் அனைத்தும்வறண்டு தண்ணீரின்றி காணப்படுகின்றன. கிராமப்புறங்களில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. திருப்புவனம் அருகேவெள்ளக்கரை, கீழராங்கியன்,மேலராங்கியன் உள்ளிட்ட பகுதிகளில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. பொதுமக்கள் பணம் கொடுத்து சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.



திருப்புவனத்தில் இருந்து அருப்புக்கோட்டைக்கு செல்லும் கூட்டு குடிநீர் திட்ட குழாயில் கசியும் நீரை மக்கள் நீண்ட நேரம் காத்திருந்து பிடித்து செல்கின்றனர். இதற்காக கூட்டு குடிநீர் திட்ட குழாய்கள் செல்லும் பாதை முழுவதும் பெண்கள் கூட்டம் கூட்டமாக தண்ணீருக்காக காத்து கிடக்கின்றனர். ஒரு குடம் தண்ணீர் பிடிக்க பல மணி நேரம் வரை காத்து கிடக்க வேண்டி இருப்பதால் கூலி வேலைக்கு செல்ல முடியாமல் மக்கள் தவிக்கின்றனர். எனவே ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் கிராமப்புறங்களில் தட்டுப்பாடின்றி குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

 

Advertisement
மேலும் சிவகங்கை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X