பாதி வழியில் இறக்கப்படும் பயணிகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 ஜூன்
2019
01:12

திருப்புவனம்:திருப்புவனம் அருகே மடப்புரத்திற்கு செல்லும் அரசு டவுன் பஸ்கள் இரவு நேரத்தில் ஊருக்குள் செல்லாமல் பாதி வழியிலேயே பயணிகளை இறக்கி விடுவதாக புகார் எழுந்துள்ளது.



திருப்புவனத்தைச் சுற்றிலும் 45 ஊராட்சிகளைச் சேர்ந்த 152 கிராமங்கள் உள்ளன. இக்கிராமங்களுக்கு திருப்புவனம் அரசு போக்குவரத்து கழக கிளை பணிமனை மூலம் அரசு டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன. திருப்புவனத்தில் செயல்பட்டு வந்த அரசு போக்குவரத்து கழக கிளை பணிமனை சொந்த இடமான மடப்புரத்திற்கு சில ஆண்டுகளுக்கு முன் மாற்றப்பட்டன.



இரவுநேரத்தில் டிரிப்பை முடிக்கும் டவுன் பஸ்கள் டெப்போவில் நிறுத்தப்படுவது வழக்கம். சமீப காலமாக மடப்புரத்திற்கு இயக்கப்படும் அரசு டவுன் பஸ்கள் ஊருக்குள் செல்லாமல் பணிமனை வாசலிலேயே பயணிகளை இறக்கி விட்டு விடுகின்றனர்.இதனால் பெண்கள், குழந்தைகள் பலரும் இரவில் அச்சத்துடன் நீண்டதுாரம் நடந்து செல்ல வேண்டியுள்ளது.



பயணிகள் கூறியதாவது: விவசாயம் பொய்த்து விட்டதால் பலரும் மதுரைக்கு கூலி வேலைக்கு சென்று வருகிறோம், காலை 7:00 மணிக்கு வேலைக்குசெல்லும் நாங்கள் இரவு 9:00 மணிக்கு மேல் கடைசி பஸ்சில் தான் ஊர் திரும்ப வேண்டியுள்ளது. இரவு நேரத்தில் பஸ்கள் ஊருக்குள் வராமல் டெப்போ வாசலில் இறக்கி விட்டு விடுகின்றனர். ஏற்கனவே இப்பகுதியில் தெரு நாய்கள் தொந்தரவு அதிகம். மேலும் இரவுநேரத்தில் பெண்கள் அச்சத்துடன் நடந்து செல்ல வேண்டியுள்ளது. எனவே இரவு நேர பஸ்சை ஊர் வரை வந்து திரும்ப அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

 

Advertisement
மேலும் சிவகங்கை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X