| செய்களத்துார் பள்ளி அருகே ஆபத்தான டிரான்ஸ்பார்மர் Dinamalar
செய்களத்துார் பள்ளி அருகே ஆபத்தான டிரான்ஸ்பார்மர்
Advertisement
 

பதிவு செய்த நாள்

12 ஜூன்
2019
01:13

மானாமதுரை:மானாமதுரை அருகே செய்களத்துாரில் அரசு பள்ளி அருகே ஆபத்தான முறையில் ஒடிந்து விழும் நிலையில் உள்ள டிரான்ஸ்பார்மரால் விபத்து அபாயம் உள்ளது.



மானாமதுரை அருகே செய்களத்துாரில் ஊருக்கு நடுவில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது,இதனருகே அங்கன்வாடி மையம் மற்றும் சமுதாய கூடமும் செயல்பட்டு வருகிறது.
இந்த கட்டடங்களுக்கு அருகில் பல ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட டிரான்ஸ்பார்மர் துாண்களில் அரிப்பு ஏற்பட்டு எப்போது இடிந்து விழுமோ என்ற நிலையில் உள்ளது.




பள்ளி மற்றும் அங்கன்வாடி வரும் மாணவர்கள்,குழந்தைகள் இதற்கு அருகில் தான் ஓய்வு நேரங்களில் விளையாடி வருகின்றனர்.இந்நிலையில் டிரான்ஸ்பார்மர் துாண்கள் இடிந்து விழும் நிலையில் உள்ளதால் இதனை மாற்றக்கோரி ஆசிரியர்கள் மற்றும் கிராம மக்கள் மின்வாரியத்தினருக்கு பல முறை கோரிக்கை விடுத்தும் இது வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறுகின்றனர்.




ஆகவே மின்வாரியத்தினர் பெரிய அளவில் விபத்து ஏற்படும் முன் அந்த டிரான்ஸ்பார்மரை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X