| ரயிலில் அலைபேசி திருடிய சிறுவர்கள் கைது Dinamalar
ரயிலில் அலைபேசி திருடிய சிறுவர்கள் கைது
Advertisement
 

பதிவு செய்த நாள்

12 ஜூன்
2019
01:15

மானாமதுரை:ராமேஸ்வரத்தில் இருந்து மதுரைக்கு சென்ற பயணிகள் ரயிலில் அலைபேசியை திருடிய 2 சிறுவர்களை மானாமதுரை ரயில்வே போலீசார் கைது செய்தனர்.



மதுரை பாத்திமா காலேஜ் எதிர்புறம் வசித்து வரும் அழகேசன் என்பவர் கடந்த 7 ந் தேதி ராமேஸ்வரத்தில் இருந்து மதுரை செல்லும் பயணிகள் ரயிலில் ராமநாதபுரத்தில் இருந்து ஏறியுள்ளார்.தனது அலைபேசியை ரயிலில் சார்ஜ் போட்டு விட்டு கழிப்பறைக்கு சென்று விட்டு திரும்பி வந்து பார்த்த போது அலைபேசியை காணாமல் போனது குறித்து மானாமதுரை ரயில்வே போலீசில் புகார் கொடுத்தார்.



ரயில்வே போலீஸ் எஸ்.ஐ.,நாச்சி மற்றும் போலீசார் விசாரணை நடத்தி ரயிலில் சந்தேகத்திற் கிடமாக சுற்றிய பரமக்குடி காந்திநகர் பகுதியைச் சேர்ந்த 2 சிறுவர்களை பிடித்து விசாரித்ததில் திருடு போன அழகேசன் என்பவருடைய அலைபேசியை வைத்திருந்ததை அடுத்து அவர்களை கைது செய்து அவர்களிடமிருந்து அலைபேசியை கைப்பற்றினர்.

 

Advertisement
மேலும் சிவகங்கை மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X