| நாட்டு துப்பாக்கியால் மயில்கள் வேட்டை தப்பிய மதுரை நபரை தேடும் வனத்துறை Dinamalar
நாட்டு துப்பாக்கியால் மயில்கள் வேட்டை தப்பிய மதுரை நபரை தேடும் வனத்துறை
Advertisement
 

பதிவு செய்த நாள்

12 ஜூன்
2019
01:18

சிவகங்கை:காளையார்கோவில் அருகே மறவமங்கலத்தில் நாட்டு துப்பாக்கி மூலம் மயில்களை வேட்டையாடி டூவீலரில் தப்பிய மதுரை நபர் குறித்து வனத்துறையினர் விசாரிக்கின்றனர்.


சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே மறவமங்கலம் காட்டிற்குள் நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் நாட்டு துப்பாக்கிகள் மூலம் மயில்களை வேட்டையாடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.காளையார்கோவில் எஸ்.ஐ., கணேஷ்பாபு தலைமையிலான ரோந்து போலீசார் மறவமங்கலம் ரோட்டில் நேற்று முன்தினம் இரவு 1:45 மணிக்கு வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது டூவீலரில் இரண்டு மூடைகளுடன் வந்த நபரை மறித்தனர்.ஆனால் அவர் வண்டியை நிறுத்தாமல் தப்பி சென்றார்.



போலீசார் அந்நபரை விரட்டினர். காயாஓடை அருகே சென்றபோது டூவீலரில் இருந்த ஒரு மூடையை கீழே போட்டுவிட்டு, மற்றொரு மூடையுடன் தப்பி சென்றார்.போலீசார் தொடர்ந்து விரட்டி சென்றதில் நேற்று அதிகாலை 4:45 மணிக்கு அந்நபரை கல்லல் அருகே அரண்மனை சிறுவயல் பகுதியில் பிடிக்க முயன்றனர். அவர் டூவீலர், மூடையை போட்டு விட்டு தப்பினார்.



போலீஸ் விசாரணையில் மர்ம நபர் மறவமங்கலம் காட்டில் நாட்டு துப்பாக்கியால் மயில்களை வேட்டையாடி மூடையில் கடத்தி வந்தது தெரிந்தது. டூவீலருடன், ஒரு மூடையில் இறந்து கிடந்த 6 மயில்களை கைப்பற்றி சிவகங்கை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.போலீசார் விசாரணையில் மயில்களை வேட்டையாடி தப்பிய நபர் மதுரை மாவட்டம், மேலுாரை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. சிவகங்கை வனத்துறையினர் டூவீலர், நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்து, மதுரை நபரை தேடி வருகின்றனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X