கருவேல காடுகளாக மாறும் கண்மாய்கள் திருப்புவனத்தில் விவசாயம் பாதிக்கப்படுவதாககுற்றச்சாட்டு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 ஜூன்
2019
01:27

திருப்புவனம்:திருப்புவனம் மற்றும் சுற்று வட்டார கிராம கண்மாய்களில் கடந்த சில வருடங்களாக தண்ணீர் வரத்து இல்லாததால் கருவேல மர காடுகளாக மாறி வருவதாகவும் இதனால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.



திருப்புவனத்தைச் சுற்றிலும் 45 ஊராட்சிகளைச் சேர்ந்த 152 கிராமங்கள் உள்ளன. இக்கிராமங்களில் பெரும்பாலானவை வைகை ஆற்றுதண்ணீரை நம்பியே உள்ளன. வைகை ஆற்றில் நீர்வரத்து காலங்களில் வரத்து கால்வாய் மூலம் கண்மாய்களுக்கு தண்ணீர் வருவதுவழக்கம்.



பிரமனுார் கால்வாய், திருப்பாச்சேத்தி கால்வாய், மாரநாடு கால்வாய், கானுார் கால்வாய், திருப்புவனம் கால்வாய் என பல்வேறுகால்வாய்கள் மூலம் கண்மாய்களில் தண்ணீர் கொண்டு வந்து நிரப்பப்படுவது வழக்கம். கடந்த சில வருடங்களாக போதிய மழைஇல்லாததாலும், வைகை அணையில் தண்ணீர் இருப்பு இல்லாததாலும் தண்ணீர் இன்றி வைகை ஆறு வறண்டு விட்டது.



இதனால் கண்மாய்களுக்கும் தண்ணீர் செல்லவில்லை. தண்ணீர் வரத்து இல்லாததால் கண்மாய்கள் அனைத்தும் கருவேல மரங்கள் அடர்ந்துவளர்ந்து காடுகளாக மாறிவிட்டன. தற்போது பெய்து வரும் சிறு மழைக்கு கூட கண்மாய்களில் தண்ணீர் இல்லை. கண்மாய் பள்ளங்களில் கூட தண்ணீர் இல்லாததால் காட்டு விலங்குகள் தண்ணீர் இன்றி பாதிக்கப்பட்டு வருகின்றன.



திருப்புவனம் தாலுகாவில் பொதுப்பணித்துறை சொந்தமாக 122 கண்மாய்கள் உள்ளன. இதில் வைகை ஆற்றின் இணைப்புடன் கூடிய கண்மாய் 65, வைகை ஆற்றுடன் இணைப்பு இல்லாத கண்மாய் 57 உள்ளது.திருப்புவனம் ஊராட்சி ஒன்றிய கட்டுப்பாட்டில் 111 கண்மாய்கள் உள்ளது.



விவசாயிகள் தரப்பில் கூறியதாவது: கண்மாய்களில் மழை இல்லாததால் தண்ணீரும் இல்லை, பல கண்மாய்களில் பறவைகள் குடிக்க கூட தண்ணீர் இல்லை.தண்ணீர் இல்லாததால் கண்மாய்கள் முழுவதும் கருவேல மரங்கள் அடர்ந்து காடுகளாக மாறி வருகின்றன. அடர்ந்த காடுகளில் மனிதநடமாட்டம் இல்லாததால் சட்டவிரோத செயல்கள் நடைபெற வாய்ப்பு உள்ளது.


சமீபத்தில் வேம்பத்துார் கண்மாயினுள் ஜாமினில்வந்தவர் தற்கொலை செய்து கொண்டார். நான்கு நாட்கள் கழித்துதான் மற்றவர்களுக்கு தெரியவந்தது குறிப்பிடத்தக்கது. கண்மாய்களினுள் கால்நடைகள் மேய்க்க கூட செல்ல முடியவில்லை. எனவே கண்மாய்களில் உள்ள கருவேல மரங்களை வேருடன் அகற்றமாவட்டநிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

 

Advertisement
மேலும் சிவகங்கை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X