சிவகங்கை:சிவகங்கை சாம்பவிகா மேல்நிலைப்பள்ளியில் சிவகங்கை தீயணைப்பு துறை சார்பில் தீ தடுப்பு செயல்முறை விளக்கம் மற்றும் ஒத்திகை பயிற்சி மாணவர்களுக்கு அளிக்கப்பட்டது.
சிவகங்கை தீயணைப்பு நிலைய அலுவலர் ராதாகிருஷ்ணன், போக்குவரத்து அலுவலர் கிருஷ்ணன், மற்றும் பணியாளர்கள் பங்கேற்றனர். பள்ளி செயலர் சேகர் தீ தடுப்பின் முக்கியத்துவம் குறித்து விளக்கினார். ஏற்பாடுகளை தலைமை ஆசிரியர் முத்துக்குமார், உதவி தலைமை ஆசிரியர் தியாகராஜன் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.