| பணிகளில் பாதிப்புமின்வாரியத்தில் காலி பணியிடங்கள் ஏராளம்: பணியாளர்கள் இன்றி பழுது நீக்கலில் சிக்கல் Dinamalar
பணிகளில் பாதிப்புமின்வாரியத்தில் காலி பணியிடங்கள் ஏராளம்: பணியாளர்கள் இன்றி பழுது நீக்கலில் சிக்கல்
Advertisement
 

பதிவு செய்த நாள்

12 ஜூன்
2019
01:42

அருப்புக்கோட்டை:
மின்வாரியத்தில் போதுமான பணியாளர்கள் இல்லாததால் அன்றாட பணிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.



மின்வாரியமும் பணியாளர்களை நிரப்ப அக்கறை கொள்வதில்லை.மாவட்டம் முழுவதும் மின் இணைப்புகள் பெறாத வீடுகள் இல்லை . புது புது வீடுகள், வர்த்தக நிறுவனங்கள் என பெருகி கொண்டே போகிறது. இதனால் மின் இணைப்புகளின் எண்ணிக்கையும் கூடிக் கொண்டே செல்கிறது. மின்வாரியத்திலும் பணிகள் அதிகமாகி கொண்டே உள்ளது.



அதிகாரிகளை மட்டும் பணியில் அமர்த்தும் மின்வாரியம் ஒயர்மேன்,ஹெல்பர் போன்ற பணியாளர்களை நிரப்புவதில் மெத்தனமாக உள்ளது. மின் கம்பங்களில் பழுது ஏற்பட்டால் அவற்றை சரி செய்தல் புதிய வீடுகளுக்கு இணைப்பு தருதல், மாதாந்திர பராமரிப்பு பணிகள் செய்தல் உட்பட பல பணிகளை இவர்கள் தான் செய்ய வேண்டி உள்ளது.



அறுந்து விழும் மின்கம்பிகளை உடன் சரி செய்யவும் இவர்கள் பணி அவசியமாகிறது. மாவட்டத்தில் உள்ள அனைத்து மின்வாரிய அலுவலகங்களில் பணியாளர்களின் பணி யிடங்கள் காலியாக உள்ளன. அன்றாட பணிகளில் பாதிப்பு ஏற்படுகிறது. அருப்புக்கோட்டை மின்வாரிய அலுவலகங்கள் கிழக்கு, மேற்கு, வடக்கு என 3 பகுதிகளாக பிரிக்கப்பட்டு செயல் பட்டு வருகிறது.



இந்த அலுவலகங்களில் தலா 10 ஒயர்மேன்கள்,ஹெல்பர்கள் இருக்க வேண்டிய இடத்தில் தலா 3 பேர்கள் தான் உள்ளனர். உதவியாளர்கள் இல்லாமல் பணிகளை செய்ய ஒயர்மேன்கள் சிரமப்படுகின்றனர். அவசர பணிகளை இருக்கிற ஆட்கள் தான் செய்ய வேண்டியுள்ளது. பணியாளர்கள் இல்லாமல் பல பணிகள் தேக்க நிலையில் உள்ளன . மாவட்ட மின்வாரிய நிர்வாகம்தான் பணியாளர்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.



பணிகள் பாதிப்பு




மின்வாரிய அலுவலகங்களில் போதுமான பணியாளர்கள் இல்லாததால் அன்றாட மின் பழுதை நீக்கும் பணிகள் பாதிப்பு அடைகிறது. இருக்கிற ஒயர்மேன்களால் அத்தனை பழுதுகளையும் நீக்க முடியவில்லை. அன்றாட பணிகள் தவிர, டிரான்ஸ்பார்மர் சர்வீஸ் பணிகள், மாதாந்திர பணிகள் என பணிச்சுமை கூடுகிறது. மக்களின் நலன் கருதி போதுமான பணியாளர்களை பணியில் அமர்த்த மின்வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


ராஜசேகர், சமூக ஆர்வலர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X