சுத்தியல் வேண்டாம் பேனா கொடுப்போம்: இன்று குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 ஜூன்
2019
01:51

குழந்தை தொழிலாளரை ஒழிக்கும் நோக்கத்துடன் ஐ.நா., சார்பில் 2002 முதல் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12 ல் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது. குழந்தைகள் வேலையில் இருக்க கூடாது கனவில் இருக்க வேண்டும் என்பதே இதன் கருபொருள்.குழந்தைகள் முழுநேர வேலையாக பள்ளிக்கு செல்வதும், படிப்பதும் தான். இதை உணராத பெற்றோர்கள் சிலர் தங்கள் குழந்தைகளை வேலையில் ஈடுபடுத்தி தொழிலாளர்கள் ஆக்குகிறார்கள். பூ, பொம்மையுடன் விளையாட வேண்டிய கை, கரி மணலிலும், தீக்குச்சி மருந்துக்கு மத்தியிலும் வேலை செய்வது வேதனைக்குரியதே.உலகளவில் 5 முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை வேலைக்கு அனுப்புவது குற்றமாக கருதப்படுகிறது.சிறுவயதிலே பணிக்கு செல்வதால் உளவியல் பிரச்னைகளும், விரைவிலேயே மது, புகை, குட்கா போன்றவற்றிற்கு அடிமையாகி விடுகின்றனர். குழந்தை தொழிலாளர்களில் சிலர் மோசமான சுற்றுச்சூழல் இடங்களில் கொத்தடிமைகளாக ஆண்டு கணக்கில் வேலை வாங்கப்படுகின்றனர்.போதை பொருள் கடத்துதல் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளிலும் ஈடுபடுத்தப்படுகின்றனர். குழந்தைகளின் உடல் நிலை, மனம், கல்வி, சுதந்திரம், பாதுகாப்பு உள்ளிட்டவைக்கு பாதிப்பில்லாமல் விடுமுறை, ஓய்வு நேரங்களில் பார்க்கும் சிறிய வேலைகள் தப்பில்லை. இது அவர்களின் முன்னேற்றத்திற்கு தான் வழிவகுக்கும். கடினமான வேலைகளுக்கு 18 வயதுக்கு மேற்பட்டவர்களையே ஈடுபடுத்த வேண்டும். 15 வயது வரை கல்விதான் கற்க வேண்டும் என ஐ.நா.,வின் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு அமைப்பு கூறுகிறது.அன்று குழந்தை தொழிலாளர்இன்று ரயில் இன்ஜின் டிரைவர்சாத்துார் ஒன்றியம் ஏ.ராமலிங்காபுரத்தை சேர்ந்தவர் மாயக்கண்ணன். 5 வயதில் தீப்பெட்டி தொழிற்சாலையில் வேலை பார்த்தார். இவர் மீட்கப்பட்டு தேசிய குழந்தை தொழிலாளர் திட்ட பயிற்சி மையத்தில் சேர்க்கப்பட்டார். அங்கு பயின்ற இவர் 5 ம் வகுப்பில் மாவட்ட அளவில் நடந்த திறனாய்வு தேர்வில் முதலிடம் பெற்றார். அந்த உந்துதலில் தொடர்ந்து படிக்க துவங்கியவர் எஸ்.எஸ்.எல்.சி.,யில் 438 , பிளஸ் 2 ல் 1024 மதிப்பெண் எடுத்தார். சென்னை கிண்டி அண்ணா பல்கலையில் இ.சி.இ., இன்ஜினியரிங் படித்தார்.கல்லுாரி படிப்பின் போது கல்வி கட்டணம் செலுத்த பல தன்னார்வலர்கள் உதவினார்கள். மறைந்த முதல்வர் ஜெ., ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் ஊக்கதொகை வழங்கினார்.படித்து முடித்ததும் அரசு வேலைக்கு முயற்சி செய்தார். அதில் வெற்றியும் கண்டார். இடைவிடாது படித்து மத்திய அரசின் ரயில்வே உதவி லோகோ பைலட் அதாவது உதவி ரயில் இன்ஜின் டிரைவர் தேர்வுக்கு பரீட்சை எழுதினார். 2015 ல் தேர்வாகி தற்போது மூத்த ரயில் இன்ஜின் டிரைவராக பணிபுரிகிறார்.
அவர் கூறியதாவது:எனது படிப்பிற்கு பல நல்ல உள்ளங்கள் உதவினர்.குழந்தை தொழிலாளர்கள் பயிற்சி மையத்தில் பயில்பவர்கள் எப்போதும் மனம் தளர வேண்டாம். நமக்கு யார் உதவுவார் என எண்ண வேண்டாம். இந்த உலகில் பல நல்ல மனிதர்கள் இருக்கிறார்கள். உங்கள் வாழ்க்கையை படிப்பு மட்டும் தான் மேம்படுத்தும். நிச்சயம் நம்பிக்கையுடன் படியுங்கள். அனைவருக்கும் எதிர்காலம் உண்டு, என்றார்.
ஆண்டு மீட்கப்பட்ட முறைசார் குழந்தைகள் பள்ளியில் சேர்க்கப்பட்ட குழந்தைகள்2007--08 1,448 6522008--09 1,299 4552009--10 1,193 4282010--11 1,262 4972011--12 959 1972012--13 537 1802013--14 617 1662014--15 552 1672015--16 510 2312016--17 535 1122017--18 536 1202018--19 617 1222019--20 460 125


தகவல் தரும் பென்சில்மத்திய அரசின் தொழிலாளர் வேலைவாய்ப்பு அமைச்சகத்தால் பென்சில் (பிளாட்பார்ம்பார் எபெக்டிவ் என்போர்ஸ்மென்ட் பார் நோ சைல்டு லேபர்) துவங்கப்பட்டு உள்ளது. இது இணையவழி நடைமுறை. இதன் இணையதளத்தில் குழந்தைகளை கண்காணிக்கும் திட்டம், புகார் பகுதி, மாநில அரசு, தேசிய குழந்தை தொழிலாளர் திட்டம் அடங்கும்.இதன் கீழ் பதிவு செய்யப்பட்ட குழந்தை தொழிலாளர் நிலை குறித்து இணையத்திலே அறிய முடிகிறது.இந்த இணையத்தில் 6 முதல் 18 வயதில் கண்டறியபடும் குழந்தை தொழிலாளர் களின் தரவுகள் பதிவேற்றப்படும். கண்டறியப்பட்ட குழந்தை தொழிலாளருக்கு அடையாள எண் வழங்கப்படுகிறது. தொடர்ந்து தேசிய குழந்தை தொழிலாளர் திட்ட சிறப்பு பயிற்சி மையத்திலும் சேர்க்கப்படுவர். இந்த இணையம் வழியாக தொடர்ந்து கண்காணிக்கப்படுவதால் குழந்தை தொழிலாளர்களின் இடைநிற்றல் தவிர்க்கப்படுகிறது.வேறு மாநிலங்களுக்கு சென்றாலும் கண்டறிந்து விட முடிகிறது. அவர்களது நடவடிக்கையும் கண்காணிக்கப்படுகிறது. இதனால் பிறர் வற்புறுத்தலிலோ ,ஆதரவு இன்றியோ இருக்கும் குழந்தைகள் வேலைக்கு செல்வது தவிர்க்கப்படுகிறது.பென்சிலின் நடவடிக்கைகளை பொதுமக்கள் யார் வேண்டுமானாலும் இணையத்தில் பார்க்கலாம்.


விழிப்புணர்வால் குறைகிறது10 ஆண்டுகளுக்கு முன்பு குழந்தை தொழிலாளர்கள் அதிகம் இருந்த நிலையில் தற்போது குறைந்துள்ளனர். பொதுமக்களிடம் பெருமளவு விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. தமிழக அரசின் 'குழந்தைகளின் வருமானம் பெற்றோருக்கு அவமானம்' என்ற வாசகம் வீரியமாக சென்றடைந்துள்ளது. சமீபத்தில் மாரனேரி, அருப்புக்கோட்டை பகுதிகளில் சோதனை நடத்தியதில் குழந்தை தொழிலாளர்கள் யாரும் பிடிபடவில்லை.


தொழிலாளர் துறை ஜூன் 1 முதல் 30 வரை சோதனையை தீவிரமாக நடத்த உத்தரவிட்டுள்ளது. கடந்த 10 நாட்களாக தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறோம். குழந்தை தொழிலாளர்கள் கண்டறியப்பட்டால் அவர்களை பயிற்சி மையத்தில் சேர்த்து வாழ்க்கைக்கு வழிகாட்டுவதே அரசின் நோக்கம்.


நாராயணசாமி, திட்ட இயக்குனர், குழந்தை தொழிலாளர் பாதுகாப்பு திட்டம், விருதுநகர்.
போட்டி தேர்வுக்கு அறிவுறுத்தல்ஆலைகளில் பணிபுரியும் குழந்தைகளை பள்ளிக்கு பயில அழைப்பேன். பல குழந்தைகளுக்கு படிக்க ஆசை இருக்கும் ஆனால் பணம் இருக்காது. சிறப்பு பள்ளி பற்றி எடுத்து கூறி மாத ஊக்க தொகை ரூ.500, உயர்கல்வி படிப்புக்கான ஆண்டு ஊக்க தொகை ரூ.6 ஆயிரம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி பள்ளியில் சேர்ப்பேன்.என்னிடம் பயின்ற பல மாணவர்கள் தற்போது நல்ல நிலையில் உள்ளனர். குழந்தை தொழிலாளர்கள் சிறுவயது முதலே கஷ்டப்படுகிறார்கள். அவர்கள் என்னிடம் பயில வந்த பின் அவர்களை அரசு வேலையில் சேரவே அறிவுறுத்துகிறேன். போட்டிதேர்வுகளில் படிக்கவும் வழிகாட்டுகிறேன். கல்வி கட்டணம் செலுத்த சிரமப்படும் மாணவர்களுக்கு நானே பலமுறை பணம் செலுத்தி உள்ளேன்.


மாலதி, தேசிய குழந்தை தொழிலாளர் திட்ட சிறப்பு பள்ளி ஆசிரியர், சிவகாசி.1980ல் 50 ஆயிரம் குழந்தைகள்விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு, தீப்பெட்டி உள்ளிட்டவை முக்கியமானவை. 1980 ல் 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட குழந்தைகள் பணியில் ஈடுபட்டதாக ஆய்வுகள் தெரிவிக்க, தேசிய குழந்தை தொழிலாளர் திட்டத்தால் மீட்கப்பட்டு சிறப்பு பயிற்சி மையத்தில் சேர்க்கப்பட்டனர்.இங்கு பயின்ற பின் முறைசார் பள்ளிகள் அதாவது அரசு, அரசு உதவி பெறும், தனியார் பள்ளிகளில் சேர்க்கப்படுகின்றனர். பின் கல்லுாரியில் பயின்ற பலர் இன்று நல்ல வழிகாட்டுதலுடன் பல்வேறு பணிகளில் உள்ளனர்.

 

Advertisement
மேலும் விருதுநகர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X