| டாஸ்மாக் வேண்டாம்: அல்லம்பட்டி மக்கள் முறையீடு Dinamalar
டாஸ்மாக் வேண்டாம்: அல்லம்பட்டி மக்கள் முறையீடு
Advertisement
 

பதிவு செய்த நாள்

12 ஜூன்
2019
01:59

விருதுநகர்:விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர் கூட்டத்தில் அல்லம்பட்டி பகுதியில் டாஸ்மாக் திறக்க கூடாது என அப்பகுதி மக்கள் மனு அளித்தனர்.



விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க் கூட்டம் நடந்தது. பல்வேறு கோரிக்கை மனு பெறப்பட்டது. மனுக்களை கலெக்டர் சிவஞானம் சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினார். முதலமைச்சர் தனிப்பிரிவு மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தி உடன் நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினார். டி.ஆர்.ஓ., உதயக்குமார், அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.



விருதுநகர் அல்லம்பட்டி வி.வி.ஆர்., காலனி மக்கள் அளித்த மனுவில், 'அல்லம்பட்டியின் வி.வி.ஆர்., நகர், பாரதி நகர் பகுதிகளிலும் அதிக மக்கள் வசிக்கின்றனர். டாஸ்மாக் கடை திறக்க முயற்சி நடக்கிறது. பெண்கள் அதிகம் நடமாடும் பகுதி கூலித்தொழிலாளர்கள் அதிகம். இப்பகுதியில் கடை திறந்தால் சமூக விரோத நடவடிக்கைகள் நடக்க கூடும். இதற்கு அனுமதிக்க கூடாது,' எனக் கேட்டுள்ளனர்.



சிவகாசி எரிச்சநத்தம் தங்கப்பாண்டி அளித்த மனுவில், "எரிச்சநத்தம் பகுதிக்கான மின் பராமரிப்பு பணி செய்ய ஒரே ஒரு ஒயர்மேன் மட்டுமே உள்ளார். மின்கம்பம் ஏறத் தெரிய வில்லை. இவருக்கு ஆதரவாக உள்ள மின்வாரியத்திற்கு தொடர்பில்லாத 4 பேர் முறையற்ற முறையில் மின் தடை செய்து மின்பராமரிப்பு பணியை அலுவலர்களுக்கு தெரியாமல் சட்டவிரோதமாக செய்கின்றனர்.



ஒவ்வொரு நாளும் 10 க்கு மேற்பட்ட முறை மின்தடை ஏற்படுகிறது. பொதுமக்களின் பணி பாதிக்கப்படுகிறது. மின்வாரிய அலுவலர்களுக்கு பலமுறை தபாலிலும் நேரில் நடவடிக்கை இல்லை,' என கேட்டுள்ளார்.மண்ணெண்ணெய்யோடுஏ.டி.எம்., காவலாளிமக்கள் குறைதீர்க் கூட்டத்தில் தீக்குளிப்பு முயற்சி நடப்பது வாடிக்கையாகி வருகிறது.



கடந்த வாரம் பாவாலி சந்திரகிரிபுரத்தை சேர்ந்த ஒருவர் தீக்குளிக்க முயன்றார். அதே போன்று நேற்றும் ஸ்ரீவில்லிபுத்துார் குலாலர் தெருவை சேர்ந்த கருப்பையா மண்ணெண்ணெய் கேனுடன் வந்தார். விசாரித்ததில் ,ஸ்ரீவில்லிபுத்துார் தனியார் வங்கியில் ஏ.டி.எம்., ல் செக்யூரிட்டியாக வேலை பார்க்கிறேன். முறையாக ஊதியம் தர மறுக்கிறார்கள். மன உளைச்சலில் இருக்கிறேன், என தெரிவித்தார். போலீசார் மண்ணெண்ணெய் கேனை பறிமுதல் செய்து சூலக்கரை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X