நடுரோட்டில் மின்கம்பம்; சிதைந்த தெருப்பாலம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 ஜூன்
2019
02:03

ஸ்ரீவில்லிபுத்துார்:நடுரோட்டில் மின்கம்பம், சிதைந்த தெருபாலம், குடிநீர் பற்றாக்குறை, சேதமடைந்த பெண்கள் சுகாதாரவளாகம், பராமரிப்பில்லா கிணறு, தினமும் சுத்தம் செய்யப்படாத வாறுகால்களால் நோய்பரவும் அவலம் என பல்வேறு சிரமத்திற்கு மத்தியில் வசிக்கின்றனர் ஸ்ரீவில்லிபுத்துார் தாலுகா குன்னுார் சின்னையாபுரம் காலனி மக்கள்.



இக்காலனி மெயின்ரோட்டிலிருந்து செல்லும் ரோடு பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் பள்ளமாக காணப்படுகிறது. இவ்வழியாக செல்லும் பொதுமக்கள் தினமும் சிரமத்திற்கு மத்தியில் தான் பயணிக்கின்றனர். காலனி தெருபாலம் சிதைந்துள்ளதால் டூவீலர்கள், ஆட்டோக்கள் செல்லமுடியாதநிலை காணப்படுகிறது.



சிதைந்தநிலையில் தெருக்களின் வாறுகால்கள் இருப்பதால் கழிவுகள் தேங்கி சுகாதாரக்கேடு ஏற்பட்டு பலரும் நோய்களுக்கு ஆளாகி வருகின்றனர். இப்பகுதியில் தாமிரபரணி கூட்டுகுடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் விநியோகம் நடந்தாலும் முறையான நாட்களில் சீராக சப்ளை நடக்காததால் பொதுமக்கள் குடிநீருக்கு தினமும் சிரமங்களை சந்திக்கின்றனர்.



காலனியில் நடுரோட்டில் இருக்கும் மின்கம்பத்தால் எளிதில் ஆட்டோக்கள் செல்லமுடியாத நிலை காணப்படுகிறது. உடல்நலம் குன்றியவர்களை அழைத்து செல்வதில் பெரும் சிரமத்தை மக்கள் அனுபவிக்கின்றனர். மின்வாரியத்திடம் பலமுறை புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லாமல் அலட்சியம் காட்டுகின்றனர்.



இங்குள்ள பெண்கள் சுகாதாரவளாகம் கடந்த சில மாதங்களாக சேதமடைந்து செயல்பாடின்றி உள்ளது. இதை சீரமைத்து செயல்பாட்டுக்கு கொண்டுவரக்கோரி பலமுறை வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கையும் இல்லை.இவ்வாறு இக்காலனியில் பல ஆண்டுகளாக நிலவும் அடிப்படை பிரச்னைகளை காலதாமதமின்றி போக்கிட வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.



நடுரோட்டில் மின்கம்பம்



குன்னுாரிலிருந்து சின்னையாபுரம் காலனி வரும் ரோடு பல ஆண்டுகளாக குண்டும், குழியுமாக உள்ளது. தெருபாலம் உடைந்து டூவீலர்கள் கூட செல்லமுடியாதநிலை காணப்படுகிறது. ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து தெருபாலத்தை விரைந்து சீரமைக்கவேண்டும். காலனியின் சிமென்ட் தெருவின் மையப்பகுதியில் மின்கம்பம் இருப்பதால் மக்கள் மிகுந்த சிரமத்தை சந்திக்கின்றனர்.



-அய்யனார், குடியிருப்பாளர், சின்னையாபுரம் காலனி.




வாறுகால்களில் கழிவுகள்



காலனியில் இருக்கும் கழிவுநீர் வாறுகால்கள் சிதைந்தும் பெயர்ந்தும் இருப்பதால் கழிவுகள் தேங்கி விடுகிறது. சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. போதிய துப்புரவு பணியாளர்கள் இல்லாததால் தினமும் துப்புரவு பணி நடக்காமல் கொசுத்தொல்லை ஏற்படுகிறது. பலர் அவ்வப்போது காய்ச்சலால் பாதிக்கின்றனர். கழிவுநீர் வாறுகால்களை உடனடியாக சீரமைக்கவேண்டும்.



-முருகன், குடியிருப்பாளர்,சின்னையாபுரம் காலனி.



தண்ணீருக்கு தவிப்பு



தாமிரபரணி தண்ணீர் போதுமானதாக இல்லாததால் போர்வெல் தண்ணீரை தான் தினமும் பயன்படுத்த வேண்டியுள்ளது. வாரம் ஒருமுறை வரும் குடிநீர் சில குடங்களே விழுகிறது. பொதுகுடிநீர்குழாய்கள் செயல்படவில்லை. ஒவ்வொரு வீட்டிற்கும் குடிநீர் இணைப்பு கொடுக்கவேண்டும். கிணற்றை சீரமைத்து இதன் நீரை மேல்நிலை தொட்டியில் ஏற்றி விநியோகிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.



-சின்னம்மாள், குடியிருப்பாளர், சின்னையாபுரம் காலனி.



சுகாதார வளாகத்தை சீரமையுங்கபெண்களுக்கான சுகாதார வளாகம் சேதமடைந்து மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை வைத்தும் சுகாதாரவளாகம் சீரமைக்கப்படவில்லை. சுகாதார வளாகத்தை விரைந்து சீரமைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும். மேலும், ஒவ்வொரு வீட்டிற்கும் தனிநபர் கழிப்பறை கட்டிதரவேண்டும்.


-சுந்தரம்மாள், குடியிருப்பாளர், சின்னையாபுரம் காலனி.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X