| மெட்ரிக் பள்ளி திறப்பு Dinamalar
மெட்ரிக் பள்ளி திறப்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

12 ஜூன்
2019
02:07

அருப்புக்கோட்டை:அருப்புக்கோட்டையில் கிரீன் விஸ்டம் பள்ளி துவக்க விழா மற்றும் முதல் தள திறப்பு விழா நடந்தது.



பள்ளி தாளாளர் காஜா மைதீன் தலைமை வகித்தார். சம்சுதீன் வரவேற்றார். தமிழ்நாடு இஸ்லாமிக் ஸ்கூல் வெல்பேர் அசோசியேஷன் செயலர் முகமது காசிம் தேசிய கொடி ஏற்றினார். பள்ளி முதல் தளத்தை தொழில் அதிபர் வரதராஜன் , வகுப்பறையை காஜா மைதீன் பந்தேநவாஸ்,அறிவியல் ஆய்வகத்தை சாகுல் அமீது, ஆசிரியர்கள் அறையை மொய்தீன் அப்துல் காதர், நுாலகத்தை டாக்டர் புரோஸ்கான், உள் விளையாட்டு அரங்கை தொழில் அதிபர் ஆனந்தம் திறந்து வைத்தனர். பேராசிரியர் ரத்தினசாமி, இக்ரா பள்ளி தாளாளர் முகமது யூசுப் பேசினர். இலவச சீருடைகள அம்சாகனி வழங்கினார். நன்கொடையாளர்களை சென்னை ஜகுபர் உசேன் கவுரவித்தார். பொருளாளர் சிக்கந்தர் நன்றி கூறினார்.

 

Advertisement
மேலும் விருதுநகர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X