| சிவகாசி கோயிலில் வைகாசி தேரோட்டம் Dinamalar
சிவகாசி கோயிலில் வைகாசி தேரோட்டம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

12 ஜூன்
2019
02:09

சிவகாசி:சிவகாசி விஸ்வநாதசுவாமி கோயிலில் வைகாசி விழாவை முன்னிட்டு தேரோட்டம் நடந்தது.இக்கோயில் வைகாசி திருவிழா கடந்த 3ம்தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.



சிறப்பு ஹோமம் நடத்தப்பட்டு கொடிமரத்திற்கு தயிர், பால், பஞ்சாமிர்தம், இளநீர் , சந்தனம் உள்ளிட்ட பல்வேறு அபிேஷகங்கள் நடந்தது. திருவிழா நாட்களில் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் ஊர்வலம் வந்து பக்தர்களுக்கு அருள் புரிந்து வந்தார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான நேற்று தேரோட்டம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர். பின்னர் விஸ்வநாதர் விசாலாட்சிக்கு சிறப்பு பூஜையும் நடந்தது.

 

Advertisement
மேலும் விருதுநகர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X