சிவகாசி:சிவகாசி தீயணைப்பு நிலையம் , ஜெய்ஹனுமான் பயர் அண்டு பாதுகாப்பு சர்வீஸ் சார்பில் அரசு மருத்துவமனையில் தீ விபத்து பாதுகாப்பு, தீயணைப்பு பற்றிய பயிற்சி நடந்தது. மருத்துவ அலுவலர் அய்யனார் தலைமை வகித்தார். மாவட்ட தீயணைப்பு அலுவலர் முத்துப்பாண்டி, தீயணைப்பு நிலைய அலுவலர்கள் பாலமுருகன், முருகன் முன்னிலை வகித்தனர். செவிலியர்கள், பயிற்சி செவிலியர்கள், அலுவலர்களுக்கு , வீட்டில் தீப்பிடித்தால் எவ்வாறு அணைப்பது, காஸ், ஏ.சி., யை எப்படி கையாள்வது குறித்து விளக்கப்பட்டது.