ஸ்ரீவில்லிபுத்துார்:ஸ்ரீவில்லிபுத்துார் இடையபொட்டல் தெருப்பகுதியில் பள்ளிகள், கோயில்கள், சர்ச்சுகள், சத்துணவு மையம், மருத்துவமனைகள் இருப்பதால் எந்நேரமும் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை நடமாடி வருகின்றனர். இந்நிலையில் இடையபொட்டல் தெருவில் டாஸ்மாக் திறக்க முயற்சிகள் நடந்து வருகிறது. இதற்கு இடையபொட்டல் தெரு, சங்குஊரணி, திருமுக்குளம் வடகரை, ரைட்டன்பட்டி பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து எஸ்.பி.,கலால்துறை ஆணையர், தாசில்தாருக்கு மனு அனுப்பி உள்ளனர்.