ராஜபாளையம்:ராஜபாளையம் அருகே சுந்தர ராஜபுரத்தில் விடுபட்ட ஆக்கிரமிப்புகளை 2 வது நாளாக வருவாய்த்துறையினர் அகற்றினர்.
இக்கிராமத்தில் மேடை கட்டுவது தொடர்பான பிரச்னையில் நீதிமன்ற உத்தரவுப்படி கடந்த 6ம் தேதி ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக நேற்றும் ஆக்கிரமிப்பு களை அகற்றினர். பொது மக்கள் சிலர் அதிகாரிகள், போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட தால் பரபரப்பு ஏற்பட்டது.அதிகாரிகள் சமாதானம் செய்ய ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தொடர்ந்தது. ஓடை புறம்போக்குஆக்கிரமிப்பு கழிப்பறைகள், சாலையை மறித்து கட்டப் பட்டிருந்த கட்டடங்கள், மாடிப்படிகள் அகற்றப்பட்டன.