| அரசு பஸ்களில் ரூ.5க்கு டிக்கெட் வருவாயை பெருக்க நடவடிக்கை Dinamalar
அரசு பஸ்களில் ரூ.5க்கு டிக்கெட் வருவாயை பெருக்க நடவடிக்கை
Advertisement
 

பதிவு செய்த நாள்

12 ஜூன்
2019
02:13

ஸ்ரீவில்லிபுத்துார்:அரசு போக்குவரத்து கழகம் விருதுநகர் மண்டலத்தில் வருவாயை பெருக்க சாதாரண டவுண்பஸ்களில் 5 ரூபாய் டிக்கெட் அறிமுகபடுத்தபட்டுள்ளது.



மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு டெப்போவிலும் இயங்கும் டவுண்பஸ்களில் ஆரம்பநிலை கட்டணமாக ரூ.7 மற்றும் சிட்டி எக்ஸ்பிரஸ் பஸ்களில் ரூ.9 என வசூலிக்கின்றனர். குறுகிய துாரமுள்ள இடங்களுக்கு கூட கூடுதல் கட்டணம் கொடுத்து பயணிக்கும் நிலை ஏற்பட்டது. இதனால் ஷேர் ஆட்டோக்கள், மினிபஸ்களில் அதிகளவில் பொதுமக்கள் பயணிக்கின்றனர்.


வருவாயை பெருக்க சாதரண டவுண்பஸ்களில் ஆரம்ப கட்டணமாக ரூ.5 வசூலிக்க அரசு போக்குவரத்து கழகம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி டவுண்பஸ்களில் குறைந்த கட்டணம் ரூ.5 என ஸ்டிக்கர் ஒட்டபட்டுவசூலிக்கபட்டு வருகிறது.

 

Advertisement
மேலும் விருதுநகர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X