| ரோட்டில் கொட்டப்படும்குப்பைகளால் பாதிப்பு Dinamalar
ரோட்டில் கொட்டப்படும்குப்பைகளால் பாதிப்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

12 ஜூன்
2019
02:22

ஒட்டன்சத்திரம்:ஒட்டன்சத்திரம் மார்க்கெட் பைபாஸ் ரோட்டில், ரோட்டை மறித்து குப்பை கொட்டப்படுவதால் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது.



ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டும், பைபாஸ் ரோடும் சந்திக்கும் இடத்திற்கு வடக்கு பகுதியில் ரோட்டுப் பகுதியில் குப்பைகள் கொட்டப்படுகின்றன. இவற்றை, நகராட்சி நிர்வாகம், உடனுக்குடன் அப்புறப்படுத்துவதில்லை. நாள் கணக்கில் அள்ளப்படாமல் இருப்பதால் மலை போல் குவிந்து வருகிறது.



ரோட்டின் பாதிக்கும் மேல் அடைத்துக் கொள்வதால் லாரிகள் உள்ளிட்ட வாகனங்களை இயக்க சிரமமாகஉள்ளது.பல நாட்களாக தேங்கி வரும் குப்பையிலிருந்து துர்நாற்றம் வீசுவதால் சுகாதாரம் பாதிக்கப்படுகிறது. ஒட்டன்சத்திரம் நகராட்சியின் பல இடங்களிலும் இதே நிலை தான் உள்ளது. நகராட்சி நிர்வாகம் குப்பைகளை அகற்றி சுகாதாரத்தை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலிறுத்தி உள்ளனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X