சுற்றுச்சூழல் தின விழா
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 ஜூன்
2019
02:23

வடமதுரை:குருந்தம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் திண்டுக்கல் சீட்ஸ் அறக்கட்டளை சார்பாக உலக சுற்றுச்சூழல் தின விழா கொண்டாடப்பட்டது.



தலைமை ஆசிரியர் பூங்குன்றன் தலைமை வகித்தார். சீட்ஸ் அறக்கட்டளை இயக்குனர் முத்துச்சாமி முன்னிலை வகித்தார். சூழியல் பயிற்றுனர் அய்யப்பன், பழநி கல்வி மாவட்ட தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் வின்சென்ட், சீட்ஸ் கள அலுவலர் சரண்யாதேவி காற்று மாசு பாதிப்பு, அதனை குறைப்பதற்கான வழிமுறைகள் குறித்து பேசினர்.



புத்துார் பிச்சம்பட்டியில் அய்யலுார் ஹோப், கோயம்புத்துார் அக்கறை அறக்கட்டளை இணைந்து நடத்திய விழாவிற்கு ஹோப் இயக்குனர் பழனிச்சாமி தலைமை வகித்தார். இளைஞர் மன்ற உறுப்பினர் முத்தம்மாள் வரவேற்றார். அமைப்பாளர்கள் மேனகா, மகாலட்சுமி, மன்ற உறுப்பினர்கள் அம்சவள்ளி, கவுசல்யா பேசினர்.



மன்ற தலைவி லட்சுமி தலைமையில் காடுகளில் விதைப்பந்துகள் வீசப்பட்டன. குழந்தைகள் செயல்பாட்டு மைய ஆசிரியர் ரஞ்சிதா நன்றி கூறினார்.குஜிலியம்பாறை: சி.சி., குவாரியில் உள்ள செட்டிநாடு சிமெண்ட் ஆலை சார்பில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.



செட்டிநாடு சிமென்ட் ஆலையின் இணை தலைவர் சுப்பிரமணியன் மரக்கன்றுகள் நடும் பணியை துவக்கிவைத்தார். இந்த ஆலையில் கடந்த 18 ஆண்டுகளில், 72 ஆயிரத்து 999 மரக்கன்றுகள் வைத்து பாரமரித்து வந்ததில், அவை மரமாகி நிழல் தருவதாக கூறினார். சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு 200 மரக்கன்றுகள் நடப்பட்டன. மேலும் மூன்றாயிரம் கன்றுகள் நட தீர்மானிக்கப்பட்டது. தொடர்ந்து ஆலை வளாகம் மற்றும் குடியிருப்பு பகுதியில் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

 

Advertisement
மேலும் திண்டுக்கல் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X