| புகார் பெட்டி பகுதிக்கு Dinamalar
புகார் பெட்டி பகுதிக்கு
Advertisement
 

பதிவு செய்த நாள்

12 ஜூன்
2019
02:26

கோழிக்கழிவால் துர்நாற்றம்


பழநி - உடுமலை ரோடு நெய்க்காரப்பட்டி அருகே ரோட்டோரத்தில் ஏராளமான கோழி இறைச்சி, கழிவுகளை கொட்டியுள்ளனர். இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-


--தனசேகரன், நெய்க்காரப்பட்டி.



சப்வேயில் தேங்கும் மழைநீர்



ஒட்டன்சத்திரம் ரயில்வே ஸ்டேசன் மேற்கு பகுதியில் உள்ள சப்வேயில் மழைநீர் தேங்கி உள்ளதால் போக்குவரத்திற்கு சிரமமாக உள்ளது. நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.


ஜெகநாதன், ஒட்டன்சத்திரம்.



பன்றிகளால் சுகாதாரக்கேடு



பழநி கோதைமங்கலம் ரயில்வே கேட் அருகே குப்பை மேட்டில் சுற்றித்திரியும் பன்றிகளால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் பன்றிகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.-



-ஆண்டிச்சாமி, பழநி.



பராமரிப்பில்லாத மேம்பாலம்



ஒட்டன்சத்திரம் ரயில்வே மேம்பாலம் பராமரிப்பில்லாமல் இருப்பதால், பாலத்தின் இரண்டு பக்கவாட்டு சுவர்களின் ஓரங்களில் மண் குவிந்துள்ளது. இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் பாதிப்படைகின்றனர். மண் குவியலை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.



நாகராஜ், ஒட்டன்சத்திரம்.



சேதமடைந்த மின்கம்பம்



அய்யலுார் கடவூர் பிரிவு அருகில் குளக்கரையில் 3 மின்கம்பங்கள் அடுத்தடுத்து சேதமடைந்து உள்ளன. மாற்றியமைக்க மின்வாரிய அதிகாரிகள் முன்வர வேண்டும்.


- கருப்பையா, வளவிசெட்டிபட்டி.



குடிநீர் வரவில்லை



பழநி ரயில் நிலையம் பிளாட்பாரத்தில் சுத்திகரிக்கப்பட்ட குழாயில் குடிநீர் வரவில்லை. இதனால் குடும்பத்துடன் ரயிலுக்காக காத்திருக்கும் பயணிகள் சிரமப்படுகின்றனர். ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.



-ஜானகி, திருநகர், பழநி.

 

Advertisement
மேலும் திண்டுக்கல் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X