கடற்கரை பகுதிகளில் கண்காணிப்பு தீவிரம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 ஜூன்
2019
02:32

பரங்கிப்பேட்டை:இலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நிகழ்த்திய, பயங்கரவாதிகள், தமிழக கடற்கரையோர பகுதிகளில் ஊடுருவலாம் என்ற ரகசிய தகவலை தொடர்ந்து கடற்கரை பகுதிகளில் போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.


இலங்கையில், கடந்த ஏப்ரல் மாதம் தேவாலயங்கள், ஓட்டல்கள் உட்பட எட்டு இடங்களில், பயங்கரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில், 300க்கும் மேற்பட்டவர்கள் பலியாகினர். இந்த சம்பவத்தால், இலங்கையை தொடர்ந்து இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது.இந்நிலையில், கடந்த சில நாட்களாக இலங்கை குண்டுவெடிப்பு சம்பவங்களில் ஈடுபட்ட பயங்கரவாதிகள், தமிழக கடற்கரையோர பகுதிகளில் ஊடுருவ வாய்ப்புள்ளதாக தமிழக போலீசாருக்கு, ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதைதொடர்ந்து, தமிழகம் முழுவதும், கடற்கரையோரம் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுப்பட்டு வருகின்றனர்.அந்த வகையில், கடலுார் மாவட்ட கடலோர பாதுகாப்பு குழும போலீசார், கடலுாரில் இருந்து சிதம்பரம் வல்லம்படுகை வரை கடற்கரையோர பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.பரங்கிப்பேட்டை, கிள்ளை உள்ளிட்ட கடற்கரையோர மீனவ கிராமங்களில், மீன் பிடிக்க கடலுக்கு சென்று வரும்போதும், கிராம பகுதிகளிலும், சந்தேகப்படும்படியாக அன்னிய நபர்களை பார்த்தால் தகவல் தெரிவிக்க வேண்டும் என மீனவ மக்களிடம், போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X