வலியுறுத்தல்அணையை பராமரித்து வாய்க்காலை தூர்வார விட்டல் நாயக்கன் பட்டி விவசாயிகள் எதிர்பார்ப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 ஜூன்
2019
02:32

வேடசந்துார்:'விட்டல்நாயக்கன்பட்டி அருகே உள்ள அணைக்கட்டு ஷட்டரை பராமரித்து, வரத்து வாய்க்காலை துார் வார வேண்டும்' என, விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.



குடகனாற்று நீர் தாடிக்கொம்பு, கிரியம்பட்டி, விட்டல்நாயக்கன்பட்டி வழியாக அழகாரிபுரியில் உள்ள குடகனாறு அணைக்கு செல்கிறது. இங்கு கிரியம்பட்டி அருகே குடகனாற்றின் மையப் பகுதியில் பல ஆண்டுகளுக்கு முன்பே வெங்கட்ராம ஐயங்கார் அணைக்கட்டு கட்டப்பட்டு உள்ளது.இங்கிருந்து கிளை வாய்க்கால் மூலம், விட்டல்நாயக்கன்பட்டி, கோட்டையூர், சத்தியநாதபுரம் வழியாக பாசனத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு, உபரிநீர் மீண்டும் குடகனாறில் கலக்கிறது.



இந்த அணையில் இருந்து கிளை வாய்க்கால் மூலம் செல்லும் தண்ணீர் மூலம் 200 ஏக்கர் நிலம் பாசனம் பெறும். சில ஆண்டுகளுக்கு முன்புவரை இப்பகுதி மக்கள் இந்த வாய்க்கால் பாசனத்தையே பயன்படுத்தி வந்துள்ளனர்.



தண்ணீரை தேக்க முடியவில்லை



இதற்காக பாசன ஆயக்கட்டுதாரர்கள் சங்கமும் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த அணையில் உள்ள 2 ஷட்டர்களில் ஒன்றில் தண்ணீர் கசிவு ஏற்பட்டு வீணாக வெளியேறுகிறது.
கிழக்கு மூலையில், அணையின் அடிப்பகுதியில் தண்ணீர் வெளியேறுவதால் சில நாட்களுக்கு கூட தண்ணீரை தேக்கி வைக்க முடியவில்லை. மேலும் வரத்து வாய்க்கால் முழுவதுமாக மண் மூடி கிடக்கிறது. இதனால் உடைந்த ஷட்டர் மற்றும் அணைக்கட்டு பகுதியை சரிசெய்து தண்ணீரை திறந்துவிட வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.



விவசாயிகள் வலியுறுத்தல்



ஆயக்கட்டுதாரர்கள் சங்க பொருளாளர் ராஜேந்திரன் கூறியதாவது: கடந்த 10 ஆண்டுகளாகவே கிளை வாய்க்காலில் தண்ணீர் வருவதில்லை. இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாயிகளின் நலன் கருதி, அணையின் ஷட்டர் மற்றும் அடிப்பகுதியில் நீர் கசிவு ஏற்படுவதை சரிசெய்து, வரத்து வாய்க்காலை முழுவதுமாக துார்வார வேண்டும், என்றார்.

 

Advertisement
மேலும் திண்டுக்கல் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X