| கடைக்காரரை தாக்கிய 3 வாலிபர்கள் கைது Dinamalar
கடைக்காரரை தாக்கிய 3 வாலிபர்கள் கைது
Advertisement
 

பதிவு செய்த நாள்

12 ஜூன்
2019
02:32

கடலுார்:பங்க் கடைகாரரைத் தாக்கிய மூவரை போலீசார் கைது செய்தனர்.கடலுார் முதுநகர் அடுத்த சுத்துக்குளத்தைச் சேர்ந்தவர் துரைராஜ், 48; பங்க் கடை வைத்துள்ளார். இவரிடம், அதே பகுதியைச் சேர்ந்த உமாநாத் மகன் முருகவேல், 25; வெங்கடேசன் மகன் அருள், 24; முதுநகர் பாலமுருகன் மகன் ஆனந்தகுமார்,24; ஆகியோர் சிகரெட் வாங்கிக் கொண்டு பணம் தராமல் சென்றனர்.பணத்தை கேட்ட துரைராஜை, மூவரும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.புகாரின் பேரில் முதுநகர் போலீசார் வழக்குப் பதிந்து முருகவேல் உள்ளிட்ட மூவரையும் கைது செய்தனர்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X