| கத்தரி விலை வீழ்ச்சியால் கவலையில் பழநி விவசாயிகள் Dinamalar
கத்தரி விலை வீழ்ச்சியால் கவலையில் பழநி விவசாயிகள்
Advertisement
 

பதிவு செய்த நாள்

12 ஜூன்
2019
02:35

பழநி:பழநி பகுதியில் பச்சைக் கத்தரிக்காய் விளைச்சல் இருந்தபோதும், வரத்து அதிகரிப்பால் எதிர்பார்த்த விலை கிடைக்காமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.



திண்டுக்கல் மாவட்டம் பழநி, சத்திரப்பட்டி, கணக்கன்பட்டி, பாலசமுத்திரம், ஆயக்குடி, பாப்பம்பட்டி, குதிரையாறு பகுதிகளில் ஆண்டுமுழுவதும் காய்கறிகள் சாகுபடி செய்யப்படுகின்றன. இப்பகுதியில் விளையும் காய்கறிகளை ஒட்டன்சத்திரம் மார்க்கெட், உழவர்சந்தைக்கு கொண்டு சென்று விவசாயிகள் விற்பனை செய்கின்றனர்.



தற்போது கத்தரிக்காய் விளைச்சல் அதிகரித்துள்ளது. ஏக்கருக்கு 20 மூடை வரை கிடைக்கிறது. அதேசமயம் சந்தைக்கு வரத்து அதிகரிப்பால், கடந்த வாரம் ஒரு கிலோ ரூ. 50முதல் ரூ.60 வரை விற்ற கத்தரிக்காய், தற்போது ரூ. 25 முதல் 36 வரைதான் விற்கிறது. எதிர்பார்த்த விலை கிடைக்காமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.


கோம்பைபட்டி விவசாயி துரை கூறுகையில், ''ஒரு ஏக்கரில் சாகுபடி செய்துள்ளேன். இரண்டு மாதங்களுக்குப்பின் காய்க்க துவங்கியுள்ளது. சுபமுகூர்த்த தினத்தில் ஒரு கிலோ ரூ.60 வரை விலைபோன கத்தரிக்காய் தற்போது 10 கிலோ மூடை ரூ.250க்குதான் விற்கிறது. ஏக்கருக்கு 12ஆயிரம் செலவழித்துள்ளோம். இவ்வாண்டு லாபம் எடுக்க முடியவில்லை'' என்றார்.

 

Advertisement
மேலும் திண்டுக்கல் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X