| தீத்தடுப்பு குறித்த விழிப்புணர்வு Dinamalar
தீத்தடுப்பு குறித்த விழிப்புணர்வு
Advertisement
 

பதிவு செய்த நாள்

12 ஜூன்
2019
02:48

தேனி:வடபுதுப்பட்டி முத்தாலம்மன் இந்து மேல்நிலைப்பள்ளியில் தீயணைப்பு மீட்புபணித் துறை சார்பில், தீத்தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது.


மாவட்ட தீயணைப்பு அலுவலர் தென்னரசு தலைமை வகித்தார். நிலைய அலுவலர் மனோகரன், மகளிர் உதவித்திட்ட அலுவர்கள் முருகேசன், அண்ணாத்துரை முன்னிலை வகித்தனர். பள்ளி முதல்வர் வெங்கடேசன், உதவி தலைமை ஆசிரியர் வாசு, ஆசிரியைகள், சுய உதவிக்குழு பெண்கள் பங்கேற்றனர் காஸ் சிலிண்டரில் ஏற்படும் விபத்துகளில் இருந்து தற்காத்து கொள்வது, தீயணைப்பான்களை எவ்வாறு பயன்படுத்துவது, பெட்ரோல், மண்ணெண்ணெய் உள்ளிட்டவற்றால் ஏற்படும் ஆபத்தில் இருந்து தப்பிப்பது பற்றிய செயல் விளக்கம் செய்து காட்டினர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X