தேனி:கடமலைக்குண்டு பெண், உறவினர்களுடன் போலீசார் மீது நடவடிக்கை எடுக்க கோரி கலெக்டரிடம் புகார் அளித்தார்.
கடமலைக்குண்டு
பாரததேவி பள்ளித் தெருவை சேர்ந்தவர் லட்சுமி. இவர் கலெக்டர்
பல்லவிபல்தேவிடம் வழங்கிய மனுவில்
கூறியிருப்பதாவது:கடமலைக்குண்டில் திருமண மண்டபத்தில் ஜூன் 9 ல், வசந்த விழா மாலையில் நடந்தது.
அதில் என் மருமகன் ஜெயராமச்சந்திரன், செல்வக்குமார் மது
குடித்து சண்டை போட்டனர். இன்ஸ்பெக்டர் முருகன், போலீஸ்காரர்
செல்வக்குமார் சீருடையின்றி வந்து, என் கணவர் வனராஜா, தம்பி
ஜெயராம், மருமகன் ஜெயராமச்சந்திரன், மொய் வைக்க வந்தவர்கள் என 5
பேரை அடித்து, 50 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்படும் என
மிரட்டினார்.
இவர்கள் மீது வழக்குப் போடாமல் இருக்க ரூ.5 லட்சம்
தர வேண்டும். பணம் தந்தால் வழக்குப் பதிவு செய்ய மாட்டோம் என
இன்ஸ்பெக்டர் கூறியதுடன், மிரட்டிச் சென்றனர். அதனால் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியிருந்தார். கலெக்டர் நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளதாக தெரிவித்தனர்.