தேனி:தேனி பழைய பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் திருப்பதி 44. தேனி நேருசிலை அருகே ஒரு லிட்டர் பெட்ரோலை தன் உடலில் ஊற்றி தற்கொலைக்கு முயற்சித்தார். இதனை தேனி போலீஸகாரர் முத்துக்கிருஷ்ணன் தடுத்தார். அவரை திருப்பதி பணி செய்யவிடாமல் தடுத்து, தகாத வார்த்தைகளால் பேசி, கொலை மிரட்டல் விடுத்தார். முத்துக்கிருஷ்ணன் புகாரில், போலீசார் கொலை மிரட்டல் வழக்குப்பதிவு செய்து, கைது செய்தார்.