| மழையால் ஏலத்தோட்டங்களில் பணி மும்முரம் Dinamalar
மழையால் ஏலத்தோட்டங்களில் பணி மும்முரம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

12 ஜூன்
2019
02:51

கம்பம்:இடுக்கி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்துபெய்து வருவதால் ஏலத்தோட்டங்களில்விவசாய பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.



கேரளாவில் தென்மேற்கு பருவமழை ஜூன் 6 முதல் 10 க்குள்பெய்யும் என்பது உண்மையாகியுள்ளது. கடந்த சில நாட்களாக பருவமழை பெய்து வருகிறது. அரபிக்கடலில் தென்கிழக்கு லட்சத்தீவுகளுக்கு அருகில் உருவான புயல், கேரளாவைத் தாக்கும்என்று எதிர் பார்க்கப்பட்டது. அவ்வாறு தாக்கும் பட்சத்தில், அது பெய்யும் பருவமழைக்கு ஆபத்தாக அமையும் என்றம் அச்சம் இருந்தது.



திசை மாறிய புயல்:



ஆனால் அதிர்ஷ்டவசமாக புயல் வடமேற்கு திசையை நோக்கிகுஜராத்திற்கு சென்றுள்ளது. எனவே புயல் ஆபத்திலிருந்து கேரளா தப்பியுள்ளது.ஆனால் மணிக்கு 110 முதல் 120 கி.மீ., வேகத்தில் காற்றுவீ சும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இடுக்கி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால்,அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.



ஆசியாவிலேயே பெரிய அணையான இடுக்கி அணையில் நீர்மட்டம் உயரத்துவங்கியுள்ளது. இடுக்கி அணையின் மொத்த உயரம் 2 ஆயிரத்து 403 அடியாகும். தற்போது 2 ஆயிரதது 309 அடியாக உள்ளது. பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், ஏலத்தோட்டங்களில் விவசாய பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.



கவாத்து, களையெடுத்தல், துத்தம் அடித்தல், உரமிடுதல் பணிகள் நடந்து வருகிறது. எப்படியிருந்தாலும் வரும் சீசனில், மகசூல் குறையும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. காரணம் 50 சதவீத தோட்டங்களில் மறுநடவு செய்யப்பட்டுள்ளது. இதில் மகசூல் கிடைக்க 2 ஆண்டுகளாகும் என்கின்றனர். இம் மழை ஏல விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது.

 

Advertisement
மேலும் தேனி மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X