| குடிநீர், கழிப்பறைக்கு முன்னுரிமை பெரியகுளம் எம்.எல்.ஏ., தகவல் Dinamalar
குடிநீர், கழிப்பறைக்கு முன்னுரிமை பெரியகுளம் எம்.எல்.ஏ., தகவல்
Advertisement
 

பதிவு செய்த நாள்

12 ஜூன்
2019
02:51

தேவதானப்பட்டி:மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று சரவணக்குமார்எம்.எல்.ஏ. கூறினார்.



பெரியகுளம் சட்டசபை தொகுதி இடைத் தேர்தலில் தி.மு.க., சார்பில் போட்டியிட்ட சரவணக்குமார் வெற்றி பெற்றார். இந்நிலையில், ஜி.கல்லுப்பட்டி, கெங்குவார்பட்டி, தேவதானப்பட்டி, டி.வாடிப்பட்டி, குள்ளப்புரம், முதலக்கம்பட்டி கிராமங்களில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.அப்போது குடிநீர், கழிப்பறை உட்பட அடிப்படை தேவைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.



மேலும் கெங்குவார்பட்டியில் உள்ள அரசு துவக்கப்பள்ளி, மேல்நிலைப்பள்ளியல் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். பெரியகுளம் தி.மு,க., ஒன்றிய செயலாளர் பாண்டியன், மாவட்ட மீனவரணி அமைப்பாளர் முருகன், கெங்குவார்பட்டி பேரூராட்சி செயலாளர் தமிழன், முதலக்கம்பட்டி கிளை பொறுப்பாளர் வேல்முருகன்உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X