கடலுாரில் பயணியர் நிழற்குடைகளின் பரிதாபம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 ஜூன்
2019
02:53

கடலுார்:கடலுார் நகரில் உள்ள பயணிகள் நிழற்குடை பல இடங்களிலும், பரிதாப நிலையில் உள்ளன. இவற்றை சீரமைத்து பராமரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


கடலுார் நகரில், பஸ் பயணிகள் வசதிக்காக பல்வேறு முக்கிய சாலையோரங்களில், நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கடலுார் நகரின் மையப்பகுதியில் உள்ள போஸ்ட் ஆபீஸ் பஸ் நிறுத்தத்தில், டவுன் ஹால் எதிரில் பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டது. நாளடைவில் பழுதடைந்த அந்த நிழற்குடையை, கடந்த சில ஆண்டுகளுக்கு முன் புதுப்பித்தனர். பின்னர், அந்த நிழற்குடையில் இருந்த பொதுமக்கள் அமர்வதற்கான நாற்காலிகள் சேதமடைந்தன. அடுத்த சில மாதங்களில் அந்த நாற்காலிகளும், காணாமல் போய்விட்டன.ஏ.சி., நிழற்குடைகலெக்டர் அலுவலகம் எதிரில், கடலுார் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், குளிரூட்டப்பட்ட அதிநவீன வசதியுடன் பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டது. இங்கு இரண்டு ஏ.சி., மிஷின்கள், மின்விசிறிகள், 50 பயணிகள் அமரும் வகையில் இரும்பு நாற்காலிகள், கண்ணாடி தடுப்பு உள்ளிட்டவை அமைக்கப்பட்டது. தொகுதி எம்.எல்.ஏ.,வான அமைச்சர் சம்பத், நிழற்குடையை திறந்து வைத்தார். இதனை முறையாக பராமரிக்காததால், கண்ணாடி கதவு கழற்றி, கிடத்தப்பட்டுள்ளது. ஏ.சி., மிஷின்கள் செயலிழந்துவிட்டன. நாற்காலிகள் தாறுமாறாக சிதறிக் கிடக்கின்றன. ஆரம்பத்தில் அட்டகாசமாக இருந்த பயணிகள் நிழற்குடை, தற்போது அலங்கோலமான நிலையில் உள்ளது.கடலுாரில் இருந்து நெல்லிக்குப்பம் செல்லும் சாலையில், கந்தசாமி நாயுடு மகளிர் கல்லுாரி எதிரில் உள்ள பயணிகள் நிழற்குடை, மேற்கூரை மிகவும் பலவீனமடைந்துள்ளது. அந்த கூரையில் சிமெண்ட் காரைகள் பெயர்ந்து, எந்த நேரமும் இடிந்து விழக்கூடிய அபாய நிலையில் உள்ளது. விபத்து ஏற்பட்டு, பயணிகள் பாதிக்கப்படுவதற்கு முன், நிழற்குடையை சீரமைப்பதற்கு, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X