| அவசியம் வட்டாரத்திற்கு ஒரு மண் பரிசோதனை ஆய்வகம் இலக்கை எட்ட முடியாமல் அலுவலர்கள் தவிப்பு Dinamalar
அவசியம் வட்டாரத்திற்கு ஒரு மண் பரிசோதனை ஆய்வகம் இலக்கை எட்ட முடியாமல் அலுவலர்கள் தவிப்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

12 ஜூன்
2019
02:53

கம்பம்:ஒரு வட்டாரத்திற்கு ஒரு மண் பரிசோதனை ஆய்வகம் அமைக்க வேளாண், தோட்டக்கலை இயக்குனரகங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.



வட்டார அளவில் வேளாண், தோட்டக்கலை அலுவலர் இருந்த நிலையை மாற்றி, வட்டாரத்திற்கும் ஒரு உதவிஇயக்குநர் தகுதியிலான அலுவலகங்கள் அமைக்கப்பட்டது. விவசாயிகள் ஒரே இடத்தில் அனைத்து சேவைகளையும் பெறவேண்டும் என்பதை நோக்கமாக கொண்டு, வேளாண், தோட்டக்கலை,வேளாண் பொறியியல், விதை சான்றளிப்பு துறை, வேளாண் மார்க்கெட்டிங் உள்ளிட்ட அலுவலகங்கள் செயல்பட முன்னாள் அமைச்சர் வீரபாண்டிஆறுமுகம் சட்டம் கொண்டு வந்தார்.



இலக்கை எட்ட முடிவதில்லை:



அனைத்து அலுவலகங்களும் ஒரே இடத்தில் அமைந்தன. இதில் மண் பரிசோதனை ஆய்வகமும் அடங்கி யிருந்தது. ஆனால் அதுமட்டும் அமைக்கப்படவில்லை.தற்போது மாவட்டத்திற்கு ஒரு மண் பரிசோதனை ஆய்வகம் உள்ளது. போதிய தொழில் நுட்பவல்லுநர்கள் இல்லை. இதனால் மத்திய அரசின் மண்பரிசோதனை இலக்கை எட்ட முடியவில்லை. பரிசோதனை செய்த பின், அதற்குரிய விபரங்களை நேரடியாக விவசாயிகளுக்கு மெயிலில் அனுப்பவும், உரக்கடைகளுக்கு முடிவு தந்து, அதற்கேற்றபடி உரம், பூச்சி மருந்துகள் வழங்கும் அறிவிப்பும் நடைமுறைப்படுத்தப்படவில்லை.



ஏற்கெனவே அரசு அறிவித்தபடி, ஒவ்வொரு வட்டாரத்திற்கும் ஒரு மண்பரிசோதனைஆய்வகம் அமைக்கப்பட்டால், விவசாயிகள் நேரடியாக நிலத்தின் மண்ணை பரிசோதித்து, அதற்கேற்ற சாகுபடி செய்வார்கள். எனவே, ஒவ்வொரு வட்டராத்திற்கும் ஒரு மண் பரிசோதனை ஆய்வ கம் அமைக்க இயக்குனர்கள் நடவடிக்கை எடுக்க விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X