| போலீஸ் ஸ்டேஷன் முன் விஷம் குடிப்பு Dinamalar
போலீஸ் ஸ்டேஷன் முன் விஷம் குடிப்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

12 ஜூன்
2019
02:55

நிலக்கோட்டை:நிலக்கோட்டை குரும்பபட்டியை சேர்ந்தவர் பாண்டி. நிலக்கோட்டையில் உரக் கடை நடத்தி வருகிறார்.


இவரது மனைவி முருகேஸ்வரி பூக்கட்டும் வேலைக்கு செல்கிறார். இருவருக்கும் பல மாதங்களாக சண்டை இருந்தது. சில நாட்களுக்கு முன்பு முருகேஸ்வரி அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் தனது கணவருடன் வாழ முடியாது என புகார் செய்தார். இருவரையும் அழைத்து பேசிய போலீசார் சட்டப்படி பிரிவதற்கான வழிமுறைகளை கூறி அனுப்பி வைத்தனர்.



அதன் பிறகு பாண்டி, முருகேஸ்வரி வேலை செய்யும் கம்பெனிக்கு சென்று அவரை தரக்குறைவாக திட்டியுள்ளார். இது சம்பந்தமாக முருகேஸ்வரி நேற்று முன் தினம் நிலக்கோட்டை மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தார். போலீசார் பாண்டியை வரவழைத்து விசாரித்தபோது, 'மனைவி கொடுத்த புகாரை மட்டும் விசாரிக்கிறீர்கள்' எனக்கூறி வேகமாக வெளியே சென்றார்.



கடையில் இருந்த பூச்சி மருந்தை எடுத்து வந்தவர். மகளிர் ஸ்டேஷன் முன்பாக நின்று குடித்து, தனது மகன் அபினேசுக்கும் கொடுத்தார். பின், இருசக்கர வாகனத்தில் மகனை ஏற்றிக்கொண்டு சென்றுார். அவர்களை கடை, வீட்டில் தேடிய போலீசார் பரபரப்படைந்தனர். சிறிது நேரத்தில் பாண்டி அவர் மகனுடன் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பதாக தகவல் கிடைத்தது, பாண்டி மீது தற்கொலை முயற்சி வழக்கு பதிவு செய்துள்ளனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X