| சாலை பணி நிறுத்தம்: மக்கள் அவதி Dinamalar
சாலை பணி நிறுத்தம்: மக்கள் அவதி
Advertisement
 

பதிவு செய்த நாள்

12 ஜூன்
2019
02:57

ஸ்ரீமுஷ்ணம்:ஸ்ரீமுஷ்ணத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு துவக்கப்பட்ட சாலை பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளதால், பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.


ஸ்ரீமுஷ்ணம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் சில இடங்களில் சாலை போடும் பணிகள் நடந்து வருகிறது. இதற்காக கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு, வடக்கு ரத வீதி, மேட்டுத்தெரு, தட்டாரத்தெரு ஆகிய பகுதிகளில்உள்ள சாலைகளை பொக்லைன் மூலம் பெயர்த்து போட்டனர். அதன் பிறகு சாலை போடும் பணிகள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது.இதனால் பேரூராட்சி பகுதியில் பொதுமக்கள் நடந்தும், வாகனங்களில் செல்ல முடியாமலும் அவதிப்பட்டு வருகின்றனர். தட்டாரத்தெருவில் உள்ளபள்ளிக்கு செல்லும் குழந்தைகள் கருங்கல் ஜல்லி பெயர்ந்து கிடக்கும் சாலையில்நடக்க முடியாமல், தவறி விழுந்து காயமடைகின்றனர்.எனவே, ஸ்ரீமுஷ்ணம் பேரூராட்சி பகுதியில் கிடப்பில் போடப்பட்டுள்ள சாலைப் பணிகளை விரைந்து முடிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X