வடலுார்:வடலுார் அயன் ஏரியில் சேமித்து வைக்கப்பட்ட தண்ணீரை மீன் பிடிப்பதற்காக, இன்ஜின் மூலம் வெளியேற்றி வருவதால் நிலத்தடி நீர்மட்டம் குறையும் என பொது மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
நெய்வேலி என்.எல்.சி., சுரங்களில் இருந்த வெளியேற்றப்படும் தண்ணீர் வடலுார் அயன் ஏரியில் சேமிக்கப்பட்டுசேராக்குப்பம், ஆண்டிக்குப்பம், அரங்கமங்களம், வெங்கடாங்குப்பம் உள்ளியிட்ட பகுதிகளில் விவசாய நிலங்கள் பாசன வசதிபெற்று வருகின்றன.மேலும் அயன் ஏரி வடலுார் பேரூராட்சி பகுதியில் உள்ள ஆழ்துளை கிணறுகளுக்கும் நீர் ஆதாரமாக விளங்கி வருகிறது.பல ஆண்டுகளாக பராமரிக்கப்படாமல் உள்ளதால், ஏரி துார்ந்து குறைந்த அளவே தண்ணீர் தேங்கியுள்ளது.இதனை வடலுாரில் உள்ள நுகர்வோர் சங்கம் வழக்கு தொடர்ந்து பொதுப்பணி துறை, தனியார் உதவியுடன் துார் வாரி, ஆழப்படுத்தியது. ஏரியை தொடர்ந்து பராமரிக்கவும் பொது நல அமைப்புகள் முடிவு செய்திருந்தனர்.இந்நிலையில் ஏரி துார் வாரிதண்ணீர் அதிகமாக தேங்கி இருந்ததால் மீன் வளத்துறை, ஏரியில் மீன் வளர்க்க குத்தகை விட்டது. இதனால் பொது நல அமைப்புகள்ஏரியை தொடர்ந்து பராமரிக்க முடியாத நிலை ஏற்பட்டது.கடந்த சில நாட்களாக வீசிய அக்னி வெயிலில் ஏரியின் நீர் மட்டம்வெகுவாக குறைந்தது. இந்த சமயத்தை பயன்படுத்தி ஏரியில் உள்ள மீன்களை பிடிக்க குத்தகை தாரர்கள் முடிவு செய்து, நெய்வேலி என்.எல்.சி., சுரங்கத்தில் இருந்து வரும் தண்ணீரை கால்வாய் வேட்டி மதகு வழியாக வெளியேற்றி வருவதுடன், ஏரி தண்ணீரையும் டீசல் இன்ஜின் மூலமும் வெளியேற்றி வருகின்றனர்.இதனால், ஏரியில் சேமித்து வைக்கப்பட்டிருந்த தண்ணீர்பாசனத்திற்கும் பயன்படாமல் விணாகி வருகிறது.தண்ணீரை வெளியேற்றுவதால், வடலுார் பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கும் என பொது மக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.எனவே, ஏரி தண்ணீரைவெளியேற்றாமல் மீன் பிடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.