சேதமடைந்த மேல்நிலைத்தொட்டி; மூடிய பெண்கள் கழிப்பறை அடிப்படை வசதிக்கு அல்லாடும் மணியகாரன்பட்டி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 ஜூன்
2019
03:01

ஆண்டிபட்டி:போடிதாசன்பட்டி ஊராட்சி மணியகாரன்பட்டியில் குடிநீர், சுகாதாரம், வடிகால் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இன்றி பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.



இக்கிராமத்தில் 1,500-க்கும் மேற்பட்டோர் உள்ளனர். பாலக்கோம்பை குடிநீர் திட்டத்தில் வினியோகிக்கப்படும் குடிநீர் போதுமானதாக இல்லை. கூடுதல் தேவைக்கு அமைக்கப்பட்ட போர்வெல்கள் பழுதடைந்துள்ளன. குப்பை தேங்கும் வடிகால், உடைந்த சாக்கடையால் கிராமத்தின் பல இடங்களில் சுகாதார பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கிராமத்தின் விரிவாக்கப்பகுதிக்கு இதுவரை குடிநீர், தெருவிளக்கு வசதி ஏற்படுத்தப்படவில்லை. கிராமத்தின் தேவைகள், அவல நிலைகள் குறித்து இப்பகுதி மக்கள் தெரிவித்ததாவது:



சேதம்:


எம்.செல்வநாயகம்:



30 ஆண்டுக்கு முன்பு கட்டப்பட்ட குடிநீர் மேல்நிலைத்தொட்டி சேதம் அடைந்துள்ளது. இதில் நீர் ஏற்றி வினியோகம் செய்ய முடியவில்லை. இதனை சீரமைக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் குடிநீர் பற்றாக்குறை நிலவுகிறது. கிழக்குத்தெருவில் சாக்கடை பாலம் உடைந்துள்ளது. இந்த வழியாக வாகனம் செல்ல முடிவதில்லை. வயதானவர்கள், குழந்தைகள் இதனை கடக்கும்போது தவறி விழுகின்றனர்.



பூட்டிய கழிப்பிடம்:



எம்.தங்கப்பாண்டியன்:



அரசு உதவி பெறும் ஆரம்ப பள்ளியில் இருநுாறுக்கும் மேற்பட்ட குழந்தைகள் படிக்கின்றனர். குழந்தைகளுக்கு கழிப்பறை வசதிகள் இல்லை. பள்ளி எதிரில் திறந்த வெளிப்பகுதியை கழிப்பறையாக பயன்படுத்தும் அவலம் உள்ளது. பெண்களுக்கான சுகாதார வளாகத்தில் தண்ணீர் வசதி இன்றி பூட்டப்பட்டுள்ளது. இங்கு கழிப்பறை வசதி இல்லாததால், திறந்த வெளியை பயன்படுத்த வேண்டி உள்ளது.




சர்ச் தெருவில் உள்ள பொதுக்கிணற்றை குப்பை கிடங்காக பயன்படுத்துகின்றனர். குடியிருப்பின் மையத்தில் கொட்டப்படும் குப்பை அப்புறப்படுத்தப்படுவதில்லை. இதனால் சுகாதார பாதிப்பு ஏற்படுகிறது. ரேஷன் கடையில் கடந்த இரண்டு மாதமாக அரிசி வினியோகம் இல்லை. தரமற்ற அரிசி வந்தபோது கிராம மக்கள் திருப்பி அனுப்பியதால், அதிகாரிகள் பழிவாங்கும் நடவடிக்கையில் உள்ளனர்.



சுகாதாரமில்லை:



எஸ்.குழந்தைராஜ்:



கிராமத்தின் விரிவாக்கப்பகுதியில் அதிகப்படியான வீடுகள் கட்டப்பட்டு வருகிறது. இப்பகுதியில் தெருவிளக்கு வசதி இல்லை. இரவில் வரும் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. பொதுக்குழாய் வசதியும் செய்து தரப்படவில்லை. கிராமத்தில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாடு பொதுமக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.



டேங்கர் லாரி மூலம் கிராமத்தில் விற்கப்படும் தண்ணீரை விலை கொடுத்து வாங்கி பயன்படுத்த வேண்டி உள்ளது. சமுதாய கூடத்தில் தேவையான அடிப்படை வசதிகள் இல்லை. கிராமத்தில் துப்புரவு பணியாளர்கள் பற்றாக்குறை உள்ளது. துப்புரவு பணிக்கு கூடுதல் பணியாளர்களை நியமிக்க வேண்டும்.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X