குரூப் 4 பயிற்சி வகுப்பு வரும் 14ம் தேதி துவக்கம் | கடலூர் செய்திகள் | Dinamalar
குரூப் 4 பயிற்சி வகுப்பு வரும் 14ம் தேதி துவக்கம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

12 ஜூன்
2019
03:01

கடலுார்:கடலுார் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் குரூப் 4 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு வரும் 14ம் தேதி துவங்குகிறது.


கலெக்டர் அலுவலக செய்திக் குறிப்பு;தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் குரூப் 4 பிரிவில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அரசு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தேர்விற்கு வரும் 14ம் தேதி முதல் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய இணையதளம் மூலம் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் வரும் ஜூலை 14ம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது.தேர்வு எழுதுபவர்கள் பயனடையும் வகையில், கடலுார் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டம் சார்பில், வரும் 14ம் தேதி முதல் செப்., 31ம் தேதி வரை திங்கள் முதல் வெள்ளிக் கிழமை வரை மதியம் நேரத்தில் கடலுார் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது.பயிற்சி வகுப்பு சிறந்த பாடப்பிரிவு வல்லுநர்கள், போட்டித் தேர்வில் வெற்றிப் பெற்று அரசுப் பணியில் உள்ளவர்கள் மூலம் நடத்தப்படுகிறது. இலவச பாடக்குறிப்புகள், முந்தைய ஆண்டு மாதிரி வினாத்தாள் வழங்கப்பட உள்ளது. மாதிரி தேர்வுகளும் நடத்தப்படும்.பயிற்சியில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள் தங்கள் வேலை வாய்ப்பு அலுவலக அடையாள அட்டை, தேர்விற்கு விண்ணப்பித்த விண்ணப்ப நகல் ஆகியவற்றுடன் வரும் 14ம் தேதி பிற்பகல் 2 மணிக்கு கடலுார் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வந்து பதிவு செய்து, பயிற்சியில் கலந்துக்கொள்ளலாம்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X