| ரயில்வே கேட் கீப்பரை தாக்கிய ஒருவர் கைது; 2 பேருக்கு வலை  Dinamalar
ரயில்வே கேட் கீப்பரை தாக்கிய ஒருவர் கைது; 2 பேருக்கு வலை 
Advertisement
 

பதிவு செய்த நாள்

12 ஜூன்
2019
03:02

சிதம்பரம்:கடலுார் அருகே ரயில்வே கேட் கீப்பரை தாக்கிய ஒருவரை போலீசார் கைது செய்தனர்.


கடலுார் அடுத்த ஆலப்பாக்கம் ரயில்வே கேட்டில், கேட் கீப்பராக பணிபுரிபவர் பாபு, 34. இவர் நேற்று முன்தினம் மாலை 4.00 மணியளவில், பணியில் இருந்துள்ளார்.அப்போது, விழுப்புரத்திலிருந்து மயிலாடுதுறை செல்லும் பாசஞ்சர் ரயில் வருவதை முன்னிட்டு, கேட்டை மூடியுள்ளார். அப்போது அங்கிருந்த பூண்டியாங்குப்பத்தை சேர்ந்த நரசிம்மன் மகன் அழகேசன், 38; என்பவர், கேட் கீப்பரிடம் கேட்டை திறந்துவிடுமாறு கூறி தகராறில் ஈடுபட்டார்.ஆத்திரமடைந்த அழகேசன், அவரது தம்பி சண்முகவேல், 36; மற்றும் அதே பகுதியை சேர்ந்த சிவானந்தம், 31; ராமகிருஷ்ணன்32; ஆகியோரை வரவழைத்தார். அதன் பிறகு, சண்முகவேல் உள்ளிட்ட மூவரும் கேட்கீப்பர் பாபுவை கேபினுக்குள் புகுந்து தாக்கி, அங்கிருந்த போனை உடைத்து சேதப்படுத்தினர்.இதுகுறித்து பாபு அளித்த புகாரின் பேரில், மூவர் மீதும் சிதம்பரம் ரயில்வே இன்ஸ்பெக்டர் ஸ்ரீஜா, சிறப்பு சப்இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் ஆகியோர் வழக்குப் பதிந்து, சண்முகவேலுவை கைது செய்தனர். சிவானந்தம், ராமகிருஷ்ணனை தேடி வருகின்றனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X