| மின்மோட்டார் பழுதால் குடிநீர் பிரச்னை Dinamalar
மின்மோட்டார் பழுதால் குடிநீர் பிரச்னை
Advertisement
 

பதிவு செய்த நாள்

12 ஜூன்
2019
03:06

வருஷநாடு:வருஷநாடு ஊராட்சிக்கு உட்பட்ட செல்வராஜபுரத்தில் குடிநீர் தொட்டி மின்மோட்டார் பழுது ஏற்பட்டு காட்சி பொருளாக உள்ளது. இதனால் குடிநீர் பிரச்னை ஏற்பட்டுள்ளது.



செல்வராஜபுரம் கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இவர்களுக்காக 'போர்வெல்' அமைத்து கிடைக்கின்ற நீரை சப்ளை செய்து வருகின்றனர். தேவையான நீருக்காக சில ஆண்டுகளுக்கு முன் மெயின் ரோட்டில் சிறிய குடிநீர் தொட்டி மின்மோட்டார் அமைக்கப்பட்டது. கடந்த சில மாதங்களுக்கு முன் போரில் உள்ள மின்மோட்டார் பழுது ஏற்பட்டு பயனற்றுக் கிடக்கிறது. இதனால் இப்பகுதியில் குடிநீர் பிரச்னை ஏற்பட்டுள்ளது. மின்மோட்டாரை சீரமைக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

Advertisement
மேலும் தேனி மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X