| இறந்த சிறுவர்கள் குடும்பத்திற்கு எம்.பி., நிவாரணம் வழங்கல் Dinamalar
இறந்த சிறுவர்கள் குடும்பத்திற்கு எம்.பி., நிவாரணம் வழங்கல்
Advertisement
 

பதிவு செய்த நாள்

12 ஜூன்
2019
03:06

புவனகிரி:ஏரியில் மூழ்கி இறந்த மூன்று சிறுவர்களின் குடும்பத்தினரை வி.சி., தலைவர் திருமாவளவன் எம்.பி., சந்தித்து நிவாரணம் வழங்கினார்.


புவனகிரி அருகே சாத்தப்பாடி காலனி கூலித்தொழிலாளிகள் மணிவேல் மகன்கள் தரணிதரன், 8; பரணிதரன்,8; பாலக்கிருஷ்ணன் மகன் பூவரசன்,9; ஆகியோர் அங்குள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் படித்தனர்.பள்ளி திறந்த அன்று மாலை அப்பகுதி ஏரியில் குளித்த போது நீரில் மூழ்கி மூவரும் இறந்தனர். வி.சி., தலைவர் திருமாவளவன் எம்.பி., இறந்த சிறுவர்களின் குடும்பத்தினரை சந்தித்து நிவாரணம் வழங்கி, ஆறுதல் கூறினார்.லோக்சபா தொகுதி செயலர்கள் கடலுார் தாமரைச்செல்வன், சிதம்பரம் செல்லப்பன், மாவட்ட செயலர் பாலஅறவாழி, புவனகிரி தொகுதி செயலர்கள் சுதாகர், பாவாணன், ஒன்றிய செயலர் செல்வம் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X