| மலைவாழ் மக்களுக்கு பட்டா Dinamalar
மலைவாழ் மக்களுக்கு பட்டா
Advertisement
 

பதிவு செய்த நாள்

12 ஜூன்
2019
03:06

போடி:ஜமாபந்தியில் முதுவாக்குடியில் 26 மலைவாழ் மக்களுக்கு 95 ஏக்கர் நிலத்தை வனஉரிமை சட்டத்தில் பட்டா வழங்கப்பட்டது.



போடி தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி கலெக்டர் பல்லவி பல்தேவ் தலைமையில் நடந்தது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மாவட்ட அலுவலர் ராமச்சந்திரன், தாசில்தார் மணிமாறன், தனித்தாசில்தார் முன்னிலை வகித்தார். ஜமாபந்தியில் பட்டா, சிட்டா மாறுதல், முதியோர், விததை உதவித்தொகை கோரி மனுக்களை வழங்கினர்.


மனுக்களுக்கு தீர்வு காணும் வகையில் 14 பேர்களுக்கு உதவித்தொகை, பட்டா மாறுதல்களை கலெக்டர் வழங்கினர்.போடி ஒன்றியம், கொட்டகுடி ஊராட்சி முதுவாக்குடி மலைக்கிராமத்தில் முதுவார் இனத்தை சேர்ந்தவர்கள் 50 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து விவசாய கூலித்தொழிலாளர்களாக உள்ளனர்.


வன உரிமை சட்டத்தின் கீழ் மலைவாழ் மக்கள் பட்டா கோரி கலெக்டரிடம் மனு அளித்தனர்.
மலைவாழ் மக்கள் 26 பேருக்கு 95 ஏக்கர் அளவிலான நிலத்தை வனஉரிமை சட்டத்தின் கீழ் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மாவட்ட அலுவலர் ராமச்சந்திரன் பட்டா வழங்கினார்.

 

Advertisement
மேலும் தேனி மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X