| கம்மாபுரம் அருகே மறியல்: போக்குவரத்து பாதிப்பு Dinamalar
கம்மாபுரம் அருகே மறியல்: போக்குவரத்து பாதிப்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

12 ஜூன்
2019
03:08

கம்மாபுரம்:கம்மாபுரம் அருகே சாலை மேம்பாட்டுப் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் பைக்கில் சென்ற வாலிபர் விழுந்து இறந்ததை கண்டித்து, பொது மக்கள் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதித்தது.


கம்மாபுரம் அடுத்த கோபாலபுரம் கிராமத்தை சேர்ந்தவர் காந்தி மகன் அருள்முருகன், 28. இவர், நேற்று முன்தினம் இரவு 9:00 மணியளவில், கம்மாபுரம் போலீஸ் ஸ்டேஷன் அருகே பைக்கில் (டி.என்.91 -இசட்.8829) சென்ற போது, சாலை விரிவாக்கப் பணி மற்றும் கல்வெர்ட் பாலத்திற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில், தவறி விழுந்து படுகாயமடைந்தார்.விருத்தாசலம் அரசு மருத்துவமனைக் கொண்டும் செல்லும் வழியில் இறந்தார். இச்சம்பவம் குறித்து, கம்மாபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.இதற்கிடையே விபத்தில் வாலிபர் இறந்த சம்பவத்தால் ஆத்திரமடைந்த 200க்கும் மேற்பட்டோர் கோபாலபுரம் பஸ் நிறுத்தம் அருகில், நேற்று காலை 8:30 மணியளவில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.அப்போது விருத்தாசலம் - பரங்கிப்பேட்டை சாலை விரிவாக்கப் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளங்களால் தொடர் உயிரிழப்பு ஏற்படுகிறது எனக் கூறி, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளை கண்டித்து கோஷம் எழுப்பினர்.தகவலறிந்த விருத்தாசலம் இன்ஸ்பெக்டர் ஷாகுல்அமீது, கம்மாபுரம் சப்இன்ஸ்பெக்டர் சந்தோஷ், தமிழ்நாடு சாலை மேம்பாட்டு திட்ட கண்காணிப்பாளர் ரமேஷ் ஆகியோர் பொது மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். சாலையில் பள்ளம் உள்ள இடங்களில் பத்து நாட்களுக்குள் பேட்ஜ் ஓர்க் செய்யப்படும். பாலங்களுக்காக தோண்டப்பட்ட இடங்களில் தடுப்பு பணி மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்தனர். அதனை ஏற்று 10:00 மணியளவில் மறியலை கைவிட்டு பொது மக்கள் கலைந்து சென்றனர்.விருத்தாசலம் - சிதம்பரம் சாலையில் ஒன்னரை மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X