| வனக்காப்பாளர் வீட்டில் திருட்டு Dinamalar
வனக்காப்பாளர் வீட்டில் திருட்டு
Advertisement
 

பதிவு செய்த நாள்

12 ஜூன்
2019
03:12

பெரியகுளம்:திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி வனக்காப்பாளர் ரங்கநாதன். இவர் பெரியகுளம் என்.ஜி.ஓ., காலனியில் குடும்பத்தோடு வசித்து வருகிறார்.



ரங்கநாதன் வேலைக்கு சென்ற நிலையில் நேற்று முன்தினம் இரவு மர்மநபர் ஒருவர் வீட்டின் கதவை உடைத்து, துாங்கிக்கொண்டிருந்த ரங்கநாதன் மகள் கழுத்தில் அணிந்திருந்த ஒன்றரை பவுன் தங்க செயினை பறித்தும், மற்றொரு அறையில் துாங்கிக்கொண்டிருந்த அவரது மனைவி வனஜா அணிந்திருந்த இரண்டு பவுன் தங்க செயினை பறித்துள்ளார்.



மர்மநபரிடம் போராடிய வனஜா, செயினை விடாமல் பிடித்துக்கொண்டார். இதனால் செயின் அறுந்து ஒருபவுன் நகையை பறித்துவிட்டு தப்பினான். தென்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X