| தென்னங்கன்றுகள் கிடைக்காமல் அவதி வேளாண் துறை நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல் Dinamalar
தென்னங்கன்றுகள் கிடைக்காமல் அவதி வேளாண் துறை நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
Advertisement
 

பதிவு செய்த நாள்

12 ஜூன்
2019
03:15

கம்பம்:மறுநடவு, புதிதாக தென்னங்கன்றுகள் வளர்க்க விரும்புவர்கள் கிடைக்கமல் அலைந்து வருகின்றனர். வேளாண் துறையினர் தென்னங்கன்றுகள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வருகின்றனர். .



மாவட்டத்தில் தென்னை 10 ஆயிரம் ஏக்கரில் சாகுபடியாகிறது. குறைந்த பராமரிப்பு, அதிக வருவாய், ஒவ்வொரு பகுதியும் வருவாய் என்பது தென்னையின் பலன்களாகும். 15 ஆண்டுகளில் மாவட்டம் முழுவதும் தென்னை சாகுபடி அதிகரித்தது. நல்ல விலையும் கிடைத்து வந்ததால், விவசாயிகள் விரும்பி சாகுபடி செய்து வந்தனர்.



ஆனால் சில ஆண்டுகளுக்கு முன் வாடல்நோய் தாக்கி, மகசூலை பாதித்தது. மத்திய அரசின்தென்னை வளர்ச்சி வாரியம், மரங்களை வெட்ட ஒரு மரத்திற்கு இழப்பீடாக ரூ. 250 தந்தது. விவசாயிகள் நோய் தாக்கிய மரங்களை வெட்டினர். இதனால் தென்னையின் மகசூல்பரப்பு குறைந்தது.



மீண்டும் ஆர்வம்:




தற்போது மீண்டும் தென்னை சாகுபடியில் விவசாயிகள் ஆர்வமாக ஈடுபட முன்வந்துள்ளனர். ஆனால் தென்னங்கன்றுகள் தட்டுப்பாடு உள்ளது. முன்பு தென்னங்கன்றுகள் வாங்கும் விவசாயிகளுக்கு, அதற்குரிய மானியத்தைதென்னை வளர்ச்சி வாரியம் வழங்கியது. தற்போது அதுவும் நிறுத்தியது. வேளாண் துறையில் தென்னைக்கென திட்டமும் இல்லை. தென்னங்கன்றுகள் கிடைக்காமல் அலைகின்றனர்.



வைகைஅணை வேளாண் பண்ணைக்கு சென்றால், கஜாபுயலால் பாதித்த மாவட்டங்களுக்கு, இருந்தவற்றை அனுப்பியதாக கூறுகின்றனர். வெளி மார்க்கெட்டில் கன்றின் விலை ரூ. 60 க்கு மேல் உள்ளது. விவசாயிகள் தென்னை சாகுபடிக்கு வேளாண் துறை உதவ வேண்டும். கன்றுகள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.



இது குறித்து வேளாண் துறையினர் கூறுகயைில், தென்னைக்கென திட்டமும, மானியமும் இல்லை. தென்னை வளர்ச்சி வாரியமும் நடவடிக்கைகளை நிறுத்தியது. தென்னங்கன்றுகள் வெளிமார்க்கெட்டில் வாங்க வேண்டும்' என்றனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X