| விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம் Dinamalar
விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

12 ஜூன்
2019
03:15

சிதம்பரம்:காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவை அமல்படுத்தக் கோரி, சிதம்பரத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.


சிதம்பரம் தலைமை தபால் நிலையம் எதிரே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, சங்கத்தின் மாவட்ட துணை தலைவர் கற்பனைச்செல்வம் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் சதானந்தம், மூர்த்தி முன்னிலை வகித்தனர்.தமிழகத்திற்கு கர்நாடகம் தரவேண்டிய 9.1 டி.எம்.சி., தண்ணீரை திறந்து விட வேண்டும். கடலுார் மாவட்டத்தை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும். கொள்ளிடம் ஆற்றில் உப்பு நீர் புகாமல் தடுப்பதற்கு தடுப்பணை கட்ட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.சங்கத்தின் மாநில துணை செயலாளர் சாமிநடராஜன் பங்கேற்று பேசினார். நிர்வாகிகள் செல்லையா, தர்மதுரை, கோவிந்தராஜன், சிவராமன், முனுசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X